AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Womens Asia Cup 2026: செப்.10 முதல் அரையிறுதி போட்டிகள் தொடக்கம்.. இந்திய மகளிர் அணி யாருடன் மோதுகிறது..?

Women Asia Cup Semi Final Schedule: மகளிர் ஆசியக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி, இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நாளை அதாவது 2026 செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அணி 'ஏ' பிரிவில் முதலிடத்தையும், வங்கதேச அணி 'பி' பிரிவில் இரண்டாமிடத்தையும் பிடித்தன.

Womens Asia Cup 2026: செப்.10 முதல் அரையிறுதி போட்டிகள் தொடக்கம்.. இந்திய மகளிர் அணி யாருடன் மோதுகிறது..?
மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதி போட்டிகள்Image Source: ICC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Sep 2026 17:32 PM IST

2026 மகளிர் ஆசியக் கோப்பைக்கான (2026 Womens Asia Cup) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று அதாவது 2026 செப்டம்பர் 8ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், வங்கதேசம் அரையிறுதிக்கு முன்னேறிய 4வது மற்றும் கடைசி அணியாக உருவெடுத்தது. அதற்கு முன்னதாக, இந்தியா (Indian Womens Cricket Team), இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இறுதி 4 அணிகளில் தங்களது இடங்களை ஏற்கனவே உறுதி செய்திருந்தன. ஆசியக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் வருகின்ற 2026 செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

2026 செப்டம்பர் 8ம் தேதியான நேற்று நடைபெற்ற கடைசி லீக் சுற்று ஆட்டத்தில், முதலில் பேட் செய்த வங்கதேசம் 103 ரன்கள் எடுத்தது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த பெரும்பாலான போட்டிகள் குறைந்த ரன்களே எடுக்கப்பட்டவை என்பதால், வங்கதேசத்தின் 103 ரன்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மிக அதிகமாக அமைந்தது. 104 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஐக்கிய அரபு அமீரக பேட்ஸ்மேன்களால் 69 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது.

ALSO READ: இந்திய பிளேயருக்கு எதிராக செய்கை.. பாகிஸ்தான் கேப்டனுக்கு ஐசிசி வைத்த செக்!

அரையிறுதிப் போட்டி அட்டவணை:

மகளிர் ஆசியக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி, இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நாளை அதாவது 2026 செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் முதலிடத்தையும், வங்கதேச அணி ‘பி’ பிரிவில் இரண்டாமிடத்தையும் பிடித்தன. 2வது அரையிறுதிப் போட்டி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே 2026 செப்டம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளது. இலங்கை அணி தனது பிரிவில் முதலிடத்தையும், பாகிஸ்தான் அணி ‘ஏ’ பிரிவில் இரண்டாமிடத்தையும் பிடித்தன. இவ்விரு போட்டிகளும் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும்.

  • முதல் அரையிறுதிப் போட்டி – இந்தியா – வங்கதேசம் – 10 செப்டம்பர் 2026
  • இரண்டாவது அரையிறுதிப் போட்டி – பாகிஸ்தான் – இலங்கை – 11 செப்டம்பர் 2026
  • 2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி – 13 செப்டம்பர் 2026

இந்தியாவும் இலங்கையும் இத்தொடர் முழுவதும் இதுவரை தோல்வியடையாமல் உள்ளன. தங்களின் சமீபத்திய ஆட்டத்திறனின் அடிப்படையில், இறுதிப் போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் இந்தியாவும் இலங்கையும் மோதின என்பதும், அதில் இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆசிய சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: அம்பயருக்கு எதிராக குரல்.. சிக்கலில் சிக்கிய மற்றொரு பாகிஸ்தான் பிளேயர்

இறுதிப்போட்டியில் எந்த அணி விளையாடும்..?

2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையையும் வென்றால், வருகின்ற 2026 செப்டம்பர் 13 ஆம் தேதி ஒரு பெரிய இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடைபெறலாம். இவ்விரு அணிகளும் ஒரு குழுப் போட்டியில் மோதியபோது, ​​பாகிஸ்தான் அணி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Follow Us