Womens Asia Cup 2026: அம்பயருக்கு எதிராக குரல்.. சிக்கலில் சிக்கிய மற்றொரு பாகிஸ்தான் பிளேயர்
Gull Feroza Fined: மகளிர் ஆசியக் கோப்பை 'ஏ' பிரிவு போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக விளையாடியபோது, ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக பாகிஸ்தானின் குல் பெரோசாவுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் 2026 மகளிர் ஆசியக் கோப்பை (Womens Asia Cup 2026) தொடரில் பாகிஸ்தான் (Pakistan Womens Cricket Team) அடுத்தடுத்து சிக்கல்களில் சிக்குகிறது. கடந்த 2026 செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது, பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா, ஷஃபாலி வர்மாவை வெளியேறுமாறு சைகை காட்டினார். இதற்காக ஐசிசி அவரைத் தண்டித்தது. தற்போது, மற்றொரு பாகிஸ்தான் வீராங்கனையான குல் ஃபெரோசாவும் தண்டிக்கப்பட்டுள்ளார். நேற்று அதாவது 2026 செப்டம்பர் 7ம் தேதி ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியின்போது, நடுவரின் முடிவை எதிர்த்து ஃபெரோசா போராட்டம் நடத்தினார். இதற்காக ஐசிசி அவரைத் தண்டித்துள்ளது.
ALSO READ: மீண்டும் கைகுலுக்காத இரு நாட்டு கேப்டன்கள்.. வைரலாகும் வீடியோ!




மகளிர் ஆசியக் கோப்பை ‘ஏ’ பிரிவு போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக விளையாடியபோது, ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக பாகிஸ்தானின் குல் பெரோசாவுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான ஐசிசி அறிக்கையில், “சர்வதேசப் போட்டியின் போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான, வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவுப் பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகளின் 2.8வது பிரிவை குல் மீறியது கண்டறியப்பட்டுள்ளது. அபராதத்துடன், குல் பெரோசா ஒழுங்கு நடவடிக்கைப் பதிவேட்டில் ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.” என்றார்.
2வது விதிமீறல்:
Pakistan wicket-keeper has been fined for breaching the ICC Code of Conduct.
More details ⬇️https://t.co/cLjk3Srhwg
— ICC (@ICC) September 8, 2026
24 மாதங்களில் இது ஃபிரோசாவின் இரண்டாவது விதிமீறலாகும். இதன் மூலம், இந்தக் காலகட்டத்தில் அவரது மொத்த குறைப்புப் புள்ளிகள் இரண்டாக உயர்ந்துள்ளது. கடந்த 2026 ஜூன் 23ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியின் போது செய்த விதிமீறலுக்காக, நடப்புச் சுழற்சியில் குல் பெரோசா தனது முதல் குறைப்புப் புள்ளியைப் பெற்றார்.
ALSO READ: இந்திய பிளேயருக்கு எதிராக செய்கை.. பாகிஸ்தான் கேப்டனுக்கு ஐசிசி வைத்த செக்!
என்ன நடந்தது..?
பாகிஸ்தான் இன்னிங்ஸின் 5வது ஓவரில் குல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அந்த பாகிஸ்தான் வீரர் பீல்ட் நடுவரின் முடிவுடன் தனது உடன்பாடின்மையை வெளிப்படுத்தியதோடு, பந்து தனது மட்டையின் விளிம்பில் பட்டதைக் குறிக்கும் வகையில் அதைச் சுட்டிக்காட்டினார். குல் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஐசிசி சர்வதேச போட்டி நடுவர்கள் குழுவின் உறுப்பினரான சுப்ரியா ராணி தாஸ் விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டார். இதனால் முறையான விசாரணைக்கான தேவை தவிர்க்கப்பட்டது.