BCCI: ஒரு போட்டிக்கு ரூ.1.31 கோடி.. அசோசியேட் ஸ்பான்சரை கைப்பற்றிய பிசிசிஐ!
BCCI Associate Partners: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான கேம்பா கோலா, அசோசியேட் பார்ட்னர் பதவிக்காக ஒரு போட்டிக்கு ரூ. 1.31 கோடி செலுத்தி அதிகபட்ச ஏலத்தைக் கோரியது. எஸ்பிஐ லைஃப் மற்றும் சாட் ஜிபிடி ஆகிய இரண்டும் ஒரு போட்டிக்கு ரூ. 1.2 கோடி ஏலம் கோரின. கேம்பா கோலாவுடன் பிஸ்லெரி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து போட்டியிட்டன.
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) வரவிருக்கும் உள்ளூர் தொடருக்காக, கேம்பா கோலா, எஸ்பிஐ லைஃப் மற்றும் சாட் ஜிபிடி ஆகியவற்றை பிசிசிஐ தனது அசோசியேட் ஸ்பான்சர்களாக தேர்ந்தெடுத்துள்ளது. பிசிசிஐயின் முந்தைய இணைப் பங்குதாரர் ஒப்பந்தம் கடந்த 2026 ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைந்தது. இந்த புதிய ஒப்பந்தம் வருகின்ற 2028 மார்ச் ம் தேதி வரை நீடிக்கும். இந்தக் காலகட்டத்தில், இந்த 3 பிராண்டுகளும் 35 போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியுடன் அசோசியேட் ஸ்பான்சர்களாக தொடர்ந்து இணைந்திருக்கும். கடந்த 2026 ஜூலை மாதம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), தனது நிகழ்வுகளுக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மற்றும் அசோசியேட் பார்ட்னர் உரிமைகளுக்காக மதிப்புமிக்க நிறுவனங்களை ஏலம் கோருமாறு அழைப்பு விடுத்தது.
ALSO READ: இந்தியா மேப்பில் சொதப்பிய ஆப்கானிஸ்தான்.. கொதிக்கும் இந்திய ரசிகர்கள்.. நடந்தது என்ன?
இந்திய அணி பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ரஞ்சி டிராபி போன்ற உள்நாட்டுப் போட்டிகள் இந்த நிகழ்வுகளில் அடங்கும். பிசிசிஐ ஆரம்பத்தில் ஸ்பான்சர்ஷிப்பிற்கான ஏலத்திற்கு 2026 ஆகஸ்ட் 13ம் தேதியையும், அசோசியேட் பார்ட்னர்களுக்கான விலைப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க 2026 ஆகஸ்ட் 25ம் தேதியையும் நிர்ணயித்திருந்தது. டைட்டில் ஸ்பான்சரைப் பெறத் தவறியதால், வாரியம் காலக்கெடுவை நேற்று அதாவது 2026 செப்டம்பர் 7ம் தேதி வரை நீட்டித்தது.




ஒரு போட்டிக்கு மட்டும் இத்தனை கோடியா?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான கேம்பா கோலா, அசோசியேட் பார்ட்னர் பதவிக்காக ஒரு போட்டிக்கு ரூ. 1.31 கோடி செலுத்தி அதிகபட்ச ஏலத்தைக் கோரியது. எஸ்பிஐ லைஃப் மற்றும் சாட் ஜிபிடி ஆகிய இரண்டும் ஒரு போட்டிக்கு ரூ. 1.2 கோடி ஏலம் கோரின. கேம்பா கோலாவுடன் பிஸ்லெரி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து போட்டியிட்டன. அவர்களும் ஒரு போட்டிக்கு ரூ. 1.2 கோடி ஏலம் கோரினர். மார்ச் 2028 வரை நடைபெறும் 35 போட்டிகளுக்காக பிசிசிஐ-க்கு ரூ. 129.85 கோடி கிடைக்கும்.
இந்திய அணியின் ஜெர்சியில் அசோசியேட் ஸ்பான்சரின் பெயர் அச்சிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டில் ஸ்பான்சரின் பெயர் மட்டுமே ஜெர்சியில் அச்சிடப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பிரதான ஸ்பான்சர் ‘அப்போலோ டயர்ஸ்’ ஆகும். இது ஜெர்சியின் முன்புறத்தில் எழுதப்பட்டு இருக்கும். அசோசியேட் ஸ்பான்சர்ஷிப் பார்ட்னர்களின் பெயரும் லோகோவும் போட்டிகளின் போது தொலைக்காட்சியில் காட்டப்படும். இந்த லோகோ, ஆடுகளத்திற்கு மேலே ஒரு கிராஃபிக்காகக் காட்டப்படலாம் அல்லது பவுண்டரி குஷன்களில் அச்சிடப்படலாம்.
ALSO READ: ரோஹித் சர்மாவின் எதிர்காலம் கேள்விக்குறி! பிசிசிஐ எப்போது முடிவு செய்யும்?
இந்திய அணியின் அடுத்த உள்ளூர் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணம் வருகின்ற 2027 செப்டம்பர் 27ம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடும்.