AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சட்டபேரவை விதிக்கு எதிரானது – முதல்வர் விஜய் மீது திமுக பரபரப்பு புகார்

CM Vijay : தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், செப்டம்பர் 7, 2026 அன்று திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து முதல்வர் விஜய் மீது திமுக துணை கொறடா கோவி.செழியன் உரிமை மீறல் புகார் தெரிவித்துள்ளார்.

சட்டபேரவை விதிக்கு எதிரானது – முதல்வர் விஜய் மீது திமுக பரபரப்பு புகார்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Sep 2026 19:03 PM IST

சென்னை, செப்டம்பர் 8 :   தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், செப்டம்பர் 7, 2026 அன்று திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து முதல்வர் விஜய் மீது திமுக துணை கொறடா கோவி.செழியன் உரிமை மீறல் புகார் தெரிவித்துள்ளார். அவரது புகாரில், சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது பேரவை விதிக்கு எதிரானது. அவையில் இல்லாத கருணாநிதி, முரசொலி மாறன் குறித்து பேசியதாக புகார் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் மீது திமுக பரபரப்பு புகார்

மேலும் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது பேரவை விதிக்கு எதிரானது. அவையில் இல்லாத கருணாநிதி, முரசொலி மாறன் குறித்து பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து முதல்வர் விஜய் மீது திமுக துணை கொறடா கோவி.செழியன் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளுக்கு முரணாக முதலமைச்சர் விஜய் பேசியதாக புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க : கோவையில் மதுபான கூடத்தில் கடும் மோதல்.. மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிய கும்பல்.. பெரும் பரபரப்பு!

தமிழக சட்டமன்றத்தில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் விஜய் பேசினார். அப்போது பேசிய அவர், கடந்த 1970-களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்ட குழாய் தயாரிக்க டெண்டர் வழங்கிய விவகாரம் குறித்து ‘சர்க்காரியா கமிஷன்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2001-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பொன்னையன் இதே சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து பேரவையில் பேசியுள்ளனர். அந்த அறிக்கை வந்து இப்போது பொன்விழா ஆண்டை எட்டியுள்ளது.

பவள விழா கண்ட கட்சியின் பொன்விழா சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை. அதில் அப்போதைய முதல்வர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆதாரம் கேட்டால், சட்டப்பேரவை நூலகத்திலேயே சர்க்காரியா கமிஷன் புத்தகம் இருக்கிறது என்று தெரிவித்தார். திமுகவுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு, ஆதாரத்தைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் போய் தேடுவார்கள். அப்படித்தான் நான் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்னதும் ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் பக்கத்திலேயேதான் இருக்கிறது.

இதையும் படிக்க : கள்ளச்சாரயத்தால் 65 பேர் பலியானதற்கு அதிகாரிகளே பொறுப்பு – வெளியான பரபரப்பு அறிக்கை

மேலும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய அவர், எதற்கெடுத்தாலும் மிசா, மிசாவைப் பார்த்தவர்கள் என்று பேசுகிறார்கள். மிசாவைப் பற்றிய வரலாறு எல்லோருக்கும் தெரியும்” என்று பேசுகையில் தனது தாடையத் தட்டி செய்கை செய்தார். இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நலையில் இதற்கு விளக்கமளித்த முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us