AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவையில் மதுபான கூடத்தில் கடும் மோதல்.. மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிய கும்பல்.. பெரும் பரபரப்பு!

Peelamedu 2 Groups Clash : கோயம்புத்தூர் மாவட்டத்தில் மது பான கூடத்தில் மதுபோதையில் இருந்த இரு கும்பல் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவையில் மதுபான கூடத்தில் கடும் மோதல்.. மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிய கும்பல்.. பெரும் பரபரப்பு!
மோதலில் ஈடுபட்ட மதுபிரியர்கள்.
Sekaran S
Sekaran S | Published: 08 Sep 2026 16:47 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், பீளமேடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் சாலையில் 11 டூ 11 பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று திங்கள் கிழமை இரவு சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் திடீரென வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிய நிலையில், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனால், மது போதையில் இருந்த அந்த கும்பல் பாரின் உள்ளேயும், வெளியேயும் கடுமையான மோதலில் ஈடுபட்டனர். இதனால், கடுமையாக ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் அங்கு கடந்த கற்கள் மற்றும் பாட்டில்கள், அருகில் இருந்த நாற்காலி ஆகியவற்றை தூக்கி வீசி தாக்க தொடங்கினர்.

சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள்

இதனால், அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல மாறியது. இதை பார்த்த பாரில் மது அருந்தி கொண்டிருந்த நபர்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்த பயங்கர மோதலை அங்கு இருந்த நபர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பிளஸ் 2 மாணவி கூட்டு வன்கொடுமை… ஒருவருக்கு மரண தண்டனை.. நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மோதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அந்த வீடியோவில் மது பிரியர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொள்ளும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இது போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மது பாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடும் மோதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!

Follow Us