AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எனது செய்கை உள்நோக்கம் கொண்டதில்லை – முதல்வர் விஜய் விளக்கம்

தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தியதாக அர்த்தம் கொள்ள வேண்டாம் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் விளக்கமளித்துள்ளார்.   மேலும் பேசிய அவர், சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என விளக்கமளித்துள்ளார்.

எனது செய்கை உள்நோக்கம் கொண்டதில்லை – முதல்வர் விஜய் விளக்கம்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 Sep 2026 18:27 PM IST

சென்னை,  செப்டம்பர் 8  : சட்டமன்றத்தில் தனது செய்கை தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தியதாக அர்த்தம் கொள்ள வேண்டாம் என தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய் விளக்கமளித்துள்ளார்.  மேலும் பேசிய அவர், சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் தனது செய்கை குறித்து முதல்வர் விஜய் விளக்கம்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : கோவையில் மதுபான கூடத்தில் கடும் மோதல்.. மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிய கும்பல்.. பெரும் பரபரப்பு!

முதல்வர் விஜய்யின் எக்ஸ் பதிவு

 

முன்னதாக இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதல்வர் தவறான செய்கை செய்ததாக ஒரு தலைவர் கூறியிருந்தார். கிடையவே கிடையாது, தவறான கண்ணோட்டம். எந்த தலைவரை பார்த்தும் தவறான செய்கை செய்பவர் அல்ல, அப்படிபட்ட தலைவரும் அவர் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு உடல்மொழி உள்ளது. சினிமாவிலேயே அவருக்கு நிறைய எக்ஸ்பிரசன்ஸ் இருக்கும். பொய் பிரசாரங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது என்று பேசியிருந்தார்.

இதையும் படிக்க : கள்ளச்சாரயத்தால் 65 பேர் பலியானதற்கு அதிகாரிகளே பொறுப்பு – வெளியான பரபரப்பு அறிக்கை

இந்த நிலையில் இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, காவல்துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் விஜய் பதில் சொல்கிறார். எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு முதல்வர் நிதானமாக பதில் சொல்ல வேண்டும். கொலையை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டதான் செய்வார்கள். அதனால் அவர்கள் மீது பரஸ்பர பழியும், குற்றத்தையும் சுமத்துவது சரியா? இது என்ன பட்டிமன்றமா? முதல்வர் விஜயின் உடல் மொழி நியாயமில்லை. 8 கோடி மக்களின் முதன்மை பிரதிநிதியாக உள்ள முதல்வர் விஜய்யே இப்படி பேசினால், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எப்படி பேசவார்கள்? உடல்மொழி கூட பொருத்தமாக அமையவில்லை என்பது வருத்தம் என்று தெரிவித்திருந்தார்.

 

Follow Us