AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!

Dayanidhi Maran criticizes CM Vijay : புலி திரைப்படத்தின் வருவாயை மறைத்த உத்தமர் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்க்கு மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது என்று சென்னை திமுக எம். பி. தயாநிதி மாறன் காட்டமாக விமர்சித்தார்.

புலி பட வருவாயை மறைத்த உத்தமர் ஜோசப் விஜய்… மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது… தயாநிதி மாறன் காட்டமான கேள்வி!
விஜய் குறித்து தயாநிதி மாறன் விமர்சனம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Sep 2026 16:11 PM IST

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பதில் உரையின் போது, திமுக மற்றும் முன்னாள் முதல்வர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இதில், சர்க்காரியா ஆணையம், மிசா உள்ளிட்டவை குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், முதல்வர் விஜயின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை திமுக எம். பி. தயாநிதி மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஊழலை பற்றி பாடம் எடுத்து வரும் உத்தமரே. தமிழக முழுவதும் நடக்கும் கொலைகளுக்கும், குற்றச்சம்பவங்களுக்கும், அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு உள்ளது. அமலாக்க துறையில் அதிக வழக்குகளை சந்தித்து வரும் கட்சியோடு கூட்டணி அமைத்து இருப்பது யார் முதல்வரே.

புலி பட வருவாயை மறைத்த உத்தமர் விஜய்

புலி பட வருவாயை மறைத்த உத்தமருக்கு மிசாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது. அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதல்வர் அடுத்த முறை சட்டப்பேரவையில் வாசிப்பாரா. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமை தேடித் தந்தவர் எனது தந்தை முரசொலி மாறன் அவர்கள். அவர், வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர் ஆவார். உள்ளூர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு அஞ்சு நடுங்கும் முதல் அமைச்சர் ஜோசப் விஜய், மரியாதைக்குரிய முரசொலி மாறனை பற்றி பேசலாமா.

மேலும் படிக்க: கரூர் சம்பவத்தில் முதல்வர் விஜய் கைதாகியிருந்தால் சிறைவாசம் தெரிந்திருக்கும்.. திமுக பரந்தாமன் கடும் விமர்சனம்!

வருமான வரித்துறை வழக்கில் சிக்கிய விஜய்

முரசொலி மாறனை மிகவும் கொச்சைப்படுத்தி பேசும் முதல் அமைச்சர், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று கடந்த ஜனவரி 2006- ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமயத்தில் விஜய் மீது வருமான வரி வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் மேடையில் ஏறக்கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

ஊழல், மிசாவை பற்றி பேச விஜய்க்கு அருகதை உள்ளதா

அதற்கு, ஆட்சேபனை தெரிவித்து விஜயை மேடையில் நிற்க வைத்து தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்று தந்த முரசொலி மாறன் மகன் தானே. அப்போது சிரிக்கும் போது இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞான சூனியமாக இருந்தாரா. ஊழல், மிசாவை பற்றி பேச முதல்வர் விஜய்க்கு அருகதை உள்ளதா. திரைப்பட அனுமதிக்காத கொடநாட்டில் நாள் முழுவதும் காத்திருந்து கைகட்டி வாய் பொத்தி முனகியதை மறந்து விட முடியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் கையில் இருக்கும் ரகசிய அறிக்கை.. தவெகவில் 4 அமைச்சர் பதவி பறிப்பு? கூட்டணி கட்சி அமைச்சர் இலாகாவும் மாறுகிறது!

Follow Us