கள்ளச்சாரயத்தால் 65 பேர் பலியானதற்கு அதிகாரிகளே பொறுப்பு – வெளியான பரபரப்பு அறிக்கை
Kallakurichi Hooch Tragedy : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயத்தால் 65 பேர் பலியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 12 துறை அதிகாரிகளே பொறுப்பு என வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் சமர்பித்த ஆணைய அறிக்கையில் தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, செப்டம்பர் 8 : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயத்தால் 65 பேர் பலியான விவகாரத்தில் 12 துறை அதிகாரிகளே பொறுப்பு என வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணைய அறிக்கையில் தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் கடமை தவறி உள்ளனர். அதிகாரிகள் எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கள்ளச்சாரயத்தால் 65 பேர் பலியானதற்கு 12 துறை அதிகாரிகளே பொறுப்பானவர்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாரயத்தால் 65 பேர் பலியான விவகாரம் தொடர்பாக வெளியான அறிக்கை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் செப்டம்பர் 8, 2026 முழுமையான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில, கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருக்கோவிலூர் காவல்நிலைய போலீசாரே பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டி.எஸ்.பி., ஆய்வாளர்கள், எஸ்.ஐ.க்கள் வேண்டுமென்றே அலட்சியம் செய்து கடமை தவறினர். இதனால் 60க்கும் மேற்பட்டோர் இறப்புக்கும் பலரின் நிரந்தர பாதிப்புக்கும் இவர்களே பொறுப்பு என கருதுகிறோம் என அந்த அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் கையில் இருக்கும் ரகசிய அறிக்கை.. தவெகவில் 4 அமைச்சர் பதவி பறிப்பு? கூட்டணி கட்சி அமைச்சர் இலாகாவும் மாறுகிறது!




அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டால், படிப்படியாக அமல்படுத்த அரசு பரிசீலிக்கலாம். கள் இறக்க, விற்க உரிமம் தருவது, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், டாஸ்மாக்கில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை 50 சதவிகிதம் குறைக்கலாம். விலை குறைப்புக்காக மது வகைகளை டெட்ரா பேக்கில் அடைத்து விற்க பரிசீலிக்கலாம். காலை 9 முதல் மதியம் 1, மாலை 5 முதல் இரவு 9 வரை என டாஸ்மாக் வணிக நேரத்தை மாற்றலாம். ஒருநாளில் ஒருவருக்கான மதுபான விற்பனை அளவை கட்டுப்படுத்த விநியோக அட்டைகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கரூர் சம்பவத்தில் முதல்வர் விஜய் கைதாகியிருந்தால் சிறைவாசம் தெரிந்திருக்கும்.. திமுக பரந்தாமன் கடும் விமர்சனம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று, செப்டம்பர் 8, 2026, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, செப்டம்பர் 7, நடைபெற்ற சட்டமன்றத்தில் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கிப் பேசினார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பான சில விவரங்களையும் சட்டப்பேரவையில் வாசித்தார். முதலமைச்சரின் இந்தப் பேச்சு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், திமுக தரப்பிலும் பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.