AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் கையில் இருக்கும் ரகசிய அறிக்கை.. தவெகவில் 4 அமைச்சர் பதவி பறிப்பு? கூட்டணி கட்சி அமைச்சர் இலாகாவும் மாறுகிறது!

TVK Cabinet Reshuffle : தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், இதில், 1 பெண் அமைச்சர் உள்பட 4 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, இரு அமைச்சரின் இலாகா மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் விஜய் கையில் இருக்கும் ரகசிய அறிக்கை.. தவெகவில் 4 அமைச்சர் பதவி பறிப்பு? கூட்டணி கட்சி அமைச்சர் இலாகாவும் மாறுகிறது!
முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 08 Sep 2026 14:06 PM IST

தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் 35 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன், ராஜேஷ் குமார் ஆகியோருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஏ. எம். ஷாஜகான் ஆகியோருக்கு அமைச்சர் அவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைத்து 4 மாதங்கள் ஆகும் நிலையில், அமைச்சர்கள் குறித்து முதல்வர் விஜய் ரகசிய அறிக்கை தயார் செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், விரைவில் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும், கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 பெண் உள்பட 4 பேரின் அமைச்சர் பதவி பறிப்பு

இதில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 1 பெண் உள்பட 4 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சர் பதவி புதிதாக 3 பேருக்கு வழங்கப்பட இருப்பதாகவும், அத்துடன் தவெக அமைச்சர் ஒருவர் தனக்கு பெரிய துறை வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவருக்கும், கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் 4 அமைச்சர்களில் ஒருவருக்கும் இலாகா மாற்றம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்… அதிமுகவில் விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அமைச்சரவை மாற்றத்தால் பீதியில் அமைச்சர்கள்

தமிழக சட்டப்பேரவை ஒரு மாதத்தை தாண்டி நடைபெற்ற நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, தவெக அமைச்சரவை மாற்றி அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு அமைச்சர்கள் பீதியில் உள்ளனராம். முன்னதாக, தவெக அரசின் 4 மாத ஆட்சி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள், துறை சார்ந்த அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டங்கள், தொகுதிகளில் நடைபெற்ற பணிகள், மக்களிடம் தவெகவினர் நடந்து கொண்ட விதம்.

அமைச்சர்களின் செயல்பாடு குறித்து ரகசிய ஆய்வறிக்கை

சட்டமன்ற செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யுமாறு முதல்வரின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு முதல்வர் விஜய் ரகசிய உத்தரவு பிறப்பித்து இருந்தாராம். அதன் அடிப்படையில், இருவரும் அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ரகசிய ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார் செய்துள்ளனர்.

சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தியில்லை

இதில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை, ஒவ்வொரு துறையின் செயலாளர் அவர்களிடம் முதல்வர் விஜய் உறுதி செய்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே, தவெக அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்பட இருக்கிறதாம்.

மேலும் படிக்க: தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.. மாநில செயலாளர் பெ. சண்முகம் திட்டவட்டம்!

Follow Us