முதல்வர் விஜய்யின் ஆவேச பேச்சு.. உதயநிதி ஸ்டாலின் இன்ஸ்டாவில் பகிர்ந்த “சுறா” படத்தின் காமெடி காட்சி வைரல்!
Udhayanidhi Stalin Share Sura Scene : தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் ஜோசப் விஜய் நடித்த சுறா படத்தின் காமெடி காட்சி ஒன்றை ஸ்டோரியாக பதிவிட்டு உள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இன்று திங்கள்கிழமை ( செப்டம்பர் 7- ஆம் தேதி) பதிலுரை வழங்கி இருந்தார். அப்போது, கடந்த திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் மற்றும் முறைகேடு உள்ளிட்டவை குறித்தும் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்தும் ஆவேசமாக பேசியிருந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடித்த சுறா படத்தின் காமெடி காட்சி ஒன்றை ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சட்டப்பேரவையில் முதல்வர் பதிலையில் மூச்சு விடாமல் ஆவேசமாக பேசியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சுறா படத்தின் காமெடி காட்சி
இதனை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காமெடி காட்சி ஒன்றை பகிர்ந்து இருப்பதாக இணையவாசிகள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக, சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பேசியிருந்தபோது, திமுக ஆட்சியில் அமலாக்கத்துறை வழக்குகள், மிசா, சர்க்காரியா ஆணையம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசியிருந்தார். முதல்வரின் இந்த பேச்சுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், அமளியில் ஈடுபட்டதுடன், பேரவை தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவையும் மேற்கொண்டனர்.




மேலும் படிக்க: திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. கே.என். நேரு உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு.. பிடியை இறுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ்?
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள்
தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் பேசுவதற்கு அனுமதி கேட்ட நிலையில், அதற்கு சபாநாயகர் பிரபாகர் அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக, திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. இதற்கான ஆதாரத்துடன் நாங்கள் சுட்டிக் காட்டிய நிலையில், அதற்கு பதில் அளிக்க முடியாமல் எங்கள் மீது ஆதாரம் இல்லாத பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
View this post on Instagram
சமூகவலைதளங்களில் சுறா பட சீன் வைரல்
மேலும், முதல்வர் கூறிய அனைத்து வழக்குகளும் தான் என்றும், முதல் அமைச்சர் பிசப் விஜய் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்குகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் தான், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் முதல்வர் விஜய் நடித்த சுறா படத்தின் காமெடி காட்சி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். இது முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் படத்தில் வசனம் பேசுவது போல கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.. நயினார் நாகேந்திரன் அட்டாக்!