AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு… 2 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல்.. முழு விவரம்!

Tamil Nadu By Election Announcement : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மற்றும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளுக்கு அறிவிப்பு இல்லை. இந்த இடைத்தேர்தல் எப்போது நடைபெறுகிறுது என்பன முழு விவரத்தை பார்க்கலாம்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு… 2 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல்.. முழு விவரம்!
தமிழக இடைத்தேர்தல் அறிவிப்பு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 07 Sep 2026 18:29 PM IST

தமிழகத்தில் மதுராந்தகம், பெருந்துறை, கரூர், அம்பாசமுத்திரம், தாராபுரம், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், தற்போது, 2 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலில் அறிவித்துள்ளது. இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதே போல, புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதில்,

மேலும் படிக்க: தர்ணாவில் தடுமாறிய திமுக எம்எல்ஏ.. கை கொடுத்து உதவிய முதல்வர் விஜய்.. பேரவையில் சுவாரஸ்யமான நிகழ்வு!

  • செப்டம்பர் 9- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல்.
  • செப்டம்பர் 16- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள்.
  • செப்டம்பர் 17- ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை.
  • செப்டம்பர் 19- ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள்.
  • அக்டோபர் 6- ஆம் தேதி இடைத்தேர்தல்.
  • அக்டோபர் 9- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்காதது ஏன்

இந்த தொகுதிகளை தவிர்த்து திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதிகளில் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடுத்துள்ள தேர்தல் வழக்குகள் காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் தற்போது இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலாகி உள்ளது.

4 முனை போட்டி நிலவும் சூழல்

இந்த தொகுதிகளில் ஆளும் தவெக சார்பிலும், எதிர்க்கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் யார்.. யார். வேட்பாளர்களாக களம் இறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது. இதனிடையே, அனைத்து தேர்தல்களிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை தனியாக களம் இறக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதனால், மேற்கண்ட இரு தொகுதிகளில் 4 முனை போட்டி நிலவும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

தாராபுரம்- மதுராந்தகத்தில் கோலோச்சப்போவது யார்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருந்தனர். இதனால், இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்பு போல அதிமுகவே வெற்றி பெறுமா அல்லது ஆளும் தவெக வெற்றி பெறுமா என்ற கேள்வி பெரிதளவில் எழுந்துள்ளது.

மேலும் படிக்க: திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. கே.என். நேரு உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு.. பிடியை இறுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ்?

Follow Us