தர்ணாவில் தடுமாறிய திமுக எம்எல்ஏ.. கை கொடுத்து உதவிய முதல்வர் விஜய்.. பேரவையில் சுவாரஸ்யமான நிகழ்வு!
CM Vijay Hands With DMK MLA : தமிழக சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ எழ முயன்றபோது, தடுமாறிய நிலையில், அவருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கை கொடுத்து தூக்கிவிட்டு உதவினார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறுது.
தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்று திங்கள்கிழமை ( செப்டம்பர் 7- ஆம் தேதி) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மீது முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கி இருந்தார். இதில், திமுக மீது அமலாக்கத்துறை வைத்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து பேசி இருந்தார். இதில், கடந்த திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துள்ளது. கட்சி நிதி என்ற பெயரில் உதயநிதிக்கும், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் பணம் சென்றுள்ளது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். இதை தொடர்ந்து, முதல் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக தங்களை பேச அனுமதிக்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.
தர்ணாவின்போது தடுமாறிய திமுக எம்எல்ஏ
ஆனால், இந்த கோரிக்கையை சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் ஏற்கவில்லை. இதனால், திமுக எம்எல்ஏக்கள் பேரவை தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவிலும், அமளியிலும் ஈடுபட்டனர். அப்போது, முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் இருக்கைக்கு முன்னதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் ( திருவையாறு சட்டமன்ற தொகுதி) கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் எழுந்திருக்க முயன்ற போது திடீரென எதிர்பாராத விதமாக தடுமாறினார்.




மேலும்: “தவெக-வினரையும் கண்டியுங்கள்!”.. பேரவையில் முதல்வர் விஜய்க்கு பிரேமலதா வைத்த கோரிக்கை!
திமுக எம்எல்ஏவுக்கு கை கொடுத்து உதவிய முதல்வர்
இதை பார்த்த முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உடனே எழுந்து, எம். எல். ஏ. துரை சந்திர சேகரனின் கையை பிடித்து அவரை தூக்கி விட உதவினார். அத்துடன், திமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட உதவி செய்யும் படி முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் தனது மேஜையை கொஞ்சம் தன் பக்கம் இழுத்துப் போட்டார். முதல் அமைச்சர் விஜய்யின் இத்தகைய செயலை பார்த்த சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் மற்றும் சட்டப்பேரவை செயலர் சாந்தி உள்ளிட்டோர் முகத்தில் பொன்முறுவலுடன் சிரிப்பை வெளிப்படுத்தினர்.
Chief Minister Joseph Vijay Extending his hand and helping DMK MLA Durai Chandrasekaran, who was seated in front of the Speaker chair, to get up. Same MLA just a few days ago, criticised the Chief Minister, addressing him in an informal and disrespectful manner. pic.twitter.com/4BRCptFv2A
— Vignesh Theni (@Vignesh_twitz) September 7, 2026
சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்களை பேச அனுமதிக்குமாறு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கூறினார். ஆனால், கடைசி வரைக்கும் திமுக எம்எல்ஏக்கள் பேசுவதற்கு சபாநாயகர் பிரபாகர் அனுமதி மறுத்ததன் காரணமாக அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் படிக்க: பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி..