கோவையில் துணிகரம்.. ஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி, வெள்ளி நகைகள் வழிப்பறி.. சிக்கிய 4 பேர்!!
Coimbatore Robbery: கோவை அவினாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் ஆந்திர நகை வியாபாரியிடம் பட்டப்பகலில் ₹1 கோடி ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளை வழிப்பறி செய்த கும்பல் காரில் தப்பியோடியது. உளுந்தூர்பேட்டை சோதனைச்சாவடியில் 4 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, செப்டம்பர் 06: தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஒன்றான கோவையின் முக்கிய மற்றும் எப்போதும் பிஸியாக காணப்படும் அவினாசி சாலையில், பட்டப்பகலில் நடந்த துணிகர வழிப்பறி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவரைக் குறிவைத்து, சுமார் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் விலைமதிப்பற்ற வெள்ளிப் பொருட்களைக் மர்மக் கும்பல் பறித்துச் சென்றுள்ளது. நகரின் மையப்பகுதியில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் வேளையில் அரங்கேறிய இந்தச் சம்பவம் குறித்து காவல் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
சம்பவம் நடந்த விதம்:
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர், அங்குள்ள தனது உறவினரின் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தொழில்முறை காரணமாகக் கோவைக்கு வந்து, இங்குள்ள தங்க நகை உற்பத்தியாளர்களிடம் இருந்து நகைகளை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், நகைகள் வாங்குவதற்காக ஆந்திராவிலிருந்து ஆம்னி பேருந்து மூலம் இன்று கோவை வந்தடைந்த ரங்கசாமி, அவினாசி சாலையில் அமைந்துள்ள லட்சுமி மில் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். பின்னர், வழக்கமாகத் தான் நகை வாங்கும் கடைக்காரருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுத் தான் வந்துவிட்ட தகவலைத் தெரிவித்துவிட்டு, தன்னை அழைத்துச் செல்ல ஆட்கள் வரும்வரை அங்கு காத்திருந்துள்ளார்.
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி வழிப்பறி; நடந்தது என்ன?
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
