கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கோவை காந்திபுரம் அடுத்த 100 அடி சாலையில், கடைக்கு சென்ற நபரின் வாகனத்தில் இருந்த செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாநகர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 100 அடி சாலையில் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட டிப்டாப் ஆசாமி, வாகனத்தை திறந்து அதில் இருந்த செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
கோவை இஸ்கான் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜென்மாஷ்டமி