கிளாடியேட்டர்ஸ் தீபாவளிகா? அஜித்தின் ஆவணப்படம் ரிலீஸ் அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா!
Gladiators Release Date Update: தமிழில் உச்ச நடிகராக இருந்து, தற்போது கார் ரேஸில் கலக்கிவருபவர் அஜித் குமார். இவரின் கார் ரேஸ் போட்டியானது கிளாடியேட்டர்ஸ் என்ற ஆவணப்படமாக இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதன் ட்ரெய்லர் திரையரங்குகளில் வெளியான நிலையில், ஆவணப்படம் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
பான் இந்திய மக்கள் வரை தனது கார் ரேஸ் (Car Race) போட்டியின் மூலம் பிரபலமானவர் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). தென்னிந்திய மொழிகளில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர், கார் ரேஸராக தற்போது புகழப்பட்டுவருகிறார். இந்திய சினிமா மற்றும் இந்தியாவை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் கார் ரேஸ் போட்டிகளில் அஜித் தந்து அணியினருடன் கலந்துகொண்டுவருகிறார் . இவர் இதுவரை இத்தாலி முதல் மலேசியா வரை பல்வேறு நாடுகளில் நடைபெற்றிருந்த கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக்கோப்பைகளை வென்றிருக்கிறார். மேலும் தற்போது அதன் பயிற்சிகளிலும் தீவிரமாக இருந்துவருகிறார். இவரின் கார் ரேஸ், கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதை இயக்குநர் ஏ.எல்.விஜய் (AL Vijay) இயக்கியுள்ளார். மேலும் இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார்.
இந்த ஆவணப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், நேற்று (06/09/2026) இதன் ட்ரெய்லர் உலகமெங்கும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதை ரசிகர்கள் பார்த்து கொண்டாடியிருந்த நிலையில், நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் சென்னை திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் ட்ரெய்லரை பார்வையிட்ட அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கியது மாரி செல்வராஜின் மஞ்சனத்தி படம் – தொடங்கி வைத்தார் இசைஞானி இளையராஜா
கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா:
ட்ரெய்லரை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்திருந்த சுரேஷ் சந்திரா, அதில் “பொதுவாகவே படங்களில் ட்ரெய்லர் நேரடியாக யூடியூப்பில் வெளியாகிவிடும், ஆனால் கிளாடியேட்டர்ஸ் ஆவண படத்தின் ட்ரெய்லரை திரையரங்குகளில் வெளியிடவேண்டும் என அஜித் குமார் சார்தான் ஆசைப்பட்டார். இதற்கு ரசிகர்கள் அவருக்கு கொடுத்த வரவேற்பு என்பது, அவர் நினைத்ததை விடவும் அதிகமாக இருக்கிறது. இப்படம் அவரின் கனவு, மேலும் இந்த ஆவணப்படமானது ஒரு உத்வேகம் அளிக்கக்கூடிய படமாக அமைந்துள்ளது. மேலும் இதன் ட்ரெய்லர் யூடியூபில் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித் குமாரின் அந்தப் படத்தில் முதல் தேர்வு தளபதி விஜய் தான் – இயக்குநர் ராஜ் கபூர்
இந்த கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பரில் வெளியாகிறது. தேதி சொல்லக்கூடாது சென்சார் கிடைக்கின்ற வரைக்கும். மேலும் இப்படம் தீபாவளிக்கு முன்பே வெளியாகும்” என்பதுபோல அதில் அவர் கூறியிருந்தார்.
அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவண படம் குறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The much-awaited #Gladiators Trailer Premiere is coming to PVR INOX! 🔥🎬
Get ready to experience the excitement on the big screen! 🍿✨#AjithKumar #Ajith #GladiatorsTrailer #Gladiators #GladiatorsTrailerPremiere #PVRINOX pic.twitter.com/ndG7lAobxl
— Suresh Chandra (@SureshChandraa) September 6, 2026
அஜித்தின் நடிப்பில் 2026ம் ஆண்டில் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. அதற்கு மாற்றாக அவரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படமானது உருவாகியுள்ளது. இந்த ஆவணப்படமானது அஜித்தின் கார் ரேஸ் கதையில் உருவாகியுள்ள நிலையில், நிச்சயம் மக்கள்; மத்தியில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.