AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கிளேடியேட்டர்ஸ் ட்ரெய்லரை தியேட்டரில் ரிலீஸ் செய்வது அஜித் குமாரின் ப்ளான் – சுரேஷ் சந்திரா

Suresh Chandra talks about Ajith Kumar | சினிமாவில் உச்சத்தில் இருப்பவர நடிகர் அஜித் குமார். இவர் சினிமாவில் நடிக்கும் அதே அளவிற்கு மோட்டார் ஸ்போர்ஸிலும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஒரு ஆவணப்படமும் வெளியாக உள்ளது.

கிளேடியேட்டர்ஸ் ட்ரெய்லரை தியேட்டரில் ரிலீஸ் செய்வது அஜித் குமாரின் ப்ளான் – சுரேஷ் சந்திரா
கிளேடியேட்டர்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Sep 2026 21:02 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அஜித் குமார் தொடர்ந்து சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் அவரது மோட்டார் ஸ்போர்ட்ஸையும் ஒரு பக்கம் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பயணித்து வருகிறார். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக நடிகர் அஜித் குமார் அதிக அளவில் தனது ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இந்தியா சார்பாக ஒரு ரேஸிங் அணியை உருவாக்கி பல நாடுகளில் நடிபெரும் கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றியைப் பெற்று வருகிறார். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விசயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மோட்டார் ஸ்போர்ஸில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நடிகர் அஜித் குமாரின் மோட்டார் ஸ்போர்ஸை ஒரு ஆவணப்படமாக தற்போது எடுத்துள்ளனர். இதனை தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரகா உள்ள இயக்குநர் விஜய் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த ஆவணப்படத்திற்கு கிளேடியேட்டர்ஸ் என்று பெயர் வைத்துள்ள நிலையில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது கிளேடியேட்டர்ஸ் படத்தின் ட்ரெய்லரை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.

கிளேடியேட்டர்ஸ் ட்ரெய்லரை தியேட்டரில் ரிலீஸ் செய்வது அஜித் ப்ளான்:

இதுகுறித்து நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா செய்தியாளர்களிடையே பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, பொதுவாகத் திரைப்படங்களின் முன்னோட்டக் காட்சிகள் (trailers) யூடியூபில் வெளியிடப்படும். ஆனால், திரையரங்கில் வெளியிடுவது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்பதால், முதலில் திரையரங்குகளில் வெளியிடலாம் என்பது அஜித் குமார் அவர்களின் யோசனையாக இருந்தது. இது மக்கள் தங்கள் கனவுகளைத் துரத்திச் செல்ல ஊக்குவிக்கும் ஒரு உத்வேகம் அளிக்கும் திரைப்படமாகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டிருக்கலாம், ஆனாலும் உங்களுக்குள் ஒரு கனவு இருக்கலாம். அதை நோக்கி நீங்கள் பயணிக்கலாம். இதைத்தான் இப்படம் உணர்த்துகிறது. இப்படம் 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read… எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு.. அரசன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா மோகன்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Joy Crizildaa: பிக் பாஸ் முக்கியமல்ல… குழந்தைதான் முக்கியம் – ஜாய் கிரிசில்டா வெளிப்படையான அறிவிப்பு!

Follow Us