AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Can I kiss you..? குட்டி ரசிகர்களுக்கு முத்தமிட்ட அஜித் குமார் – வைரலாகும் வீடியோ பதிவு!

Ajith Viral Video: சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் துபாய் கார் ரேஸ் பயிற்சியில் இருக்கும் நிலையில், சமீபத்தில் விமான நிலையம் சென்றிருக்கிறார். அங்கு தனது குட்டி ரசிகர்களுக்கு, அவர் அனுமதி கேட்டு முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Can I kiss you..? குட்டி ரசிகர்களுக்கு முத்தமிட்ட அஜித் குமார் – வைரலாகும் வீடியோ பதிவு!
அஜித் குமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 17 Aug 2026 19:51 PM IST

கோலிவுட் சினிமாவின் மூலம் நடிகராக நுழைந்து, தற்போது இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் (Car race) போட்டிகளில் கலந்துகொண்டுவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் இந்தியா மற்றும் இந்திய சினிமாவை முன்னோக்கி காட்டும் விதமாக தற்போது தனது கார் ரேஸ் பயிற்சியில் இருந்துவருகிறார். நடிகர் அஜித் குமார் இதுவரை சினிமாவில் கிட்டத்தட்ட 63 திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது 2025ம் ஆண்டில் வெளியான நிலையில், உலகமெங்கும் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அஜித்தின் சினிமா வாழ்க்கையிலே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக இது அமைந்தது.

மேலும் இப்படத்தின் இயக்குநரின் இயக்கத்தில் தனது 64வது படத்திலும் இணைகிறார். இப்படத்திற்கு “டேர் டெவில்” (Dare Devil) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் விமான நிலையம் ஒன்றில், அஜித் குட்டி ரசிகர்களை கியூட்டாக கொஞ்சிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு முந்தைய ராஷ்மிகாவின் கமெண்ட்… தற்போது பதிலளித்த யாஷ்!

தனது குட்டி ரசிகர்களை நடிகர் அஜித் குமார் கொஞ்சியது தொடர்பான வீடியோ பதிவு:

நடிகர் அஜித் குமார், விமான நிலையத்தில் தன்னை சந்திக்கவந்த குழந்தைகளை கொஞ்சியிருக்கிறார். அந்த வீடியோவில் அஜித், அந்த குட்டி ரசிகர்களிடையே, “நான் உண்மை முத்தமிடலாமா?” என கேட்டு, அவர்களின் அனுமதியுடன் முத்தமிட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. பல நாட்களுக்கு பின் அஜித்தின் இந்த கியூட்டான் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.

அஜித் குமாரின் டேர் டெவில் பட ஷூட்டிங் எப்போது:

அஜித் குமார் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். அவர் தனது நடிப்பிலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்திலும் டேர் டெவில் என்ற படத்தில் இணைந்துள்ளார். இதை அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை… 25 ஆண்டுகளைக் கடந்தது பூவெல்லாம் உன் வாசம் படம்!

இப்படமானது ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர்ஸ் மற்றும் பேமிலி பொழுதுபோக்கு படமாக உருவாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் குமாருடன் ஸ்ரீலீலா மற்றும் கயாடு லோஹர் போன்ற நடிகைகள் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் ஷூட்டிங் 2026ம் ஆண்டு செப்டம்பர் தொடக்கம் அல்லது இறுதியில் தொடங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us