AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேதாளம் படத்தில் அந்த பாடல் வேண்டாம் என்று சொன்னேன் – அனிருத் ரவிச்சந்தர்

Anirudh Ravichander About Vedalam Movie | நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் அந்த பாடல் வேண்டாம் என்று சொன்னதாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

வேதாளம் படத்தில் அந்த பாடல் வேண்டாம் என்று சொன்னேன் – அனிருத் ரவிச்சந்தர்
வேதாளம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Aug 2026 17:02 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் நவம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வேதாளம். இந்தப் படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், அஸ்வின் கக்குமானு, ராகுல் தேவ், கபீர் துஹான் சிங், அனிகேத் சவுகான், சூரி, ராஜேந்திரன்,
தம்பி ராமையா, அவினாஷ், மன்சூர் அலி கான், சுதா, மயில்சாமி, அப்புக்குட்டி, யோகி பாபு, கோவை சரளா, ரவிராஜ், ஸ்ரீரஞ்சனி, வித்யுல்லேகா ராமன், ஷர்மிளா தாபா,
நாகிநீடு, பால சரவணன், சுவாமிநாதன், ரமேஷ் திலக், ராஜ்குமார், ஸ்ரீஜா ரவி, தமிழ்செல்வி, மீரா கிருஷ்ணன், கலைராணி, ஆர்.என்.ஆர்.மனோகர், டி.ஆர்.கே.கிரண்,
அமித் திவாரி, ஜாஸ்பர், தேஜ் சப்ரு, முக்தர் கான், சுக்ரன், ஆர்யன் ஆஷிக், மிப்பு, கண்ணன் பொன்னையா மற்றும் பில்லி முரளி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குஅக்ளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனிருத் ரவிச்சந்தர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வேதாளம் படத்தில் அந்த பாடல் வேண்டாம் என்று சொன்னேன்:

ஆலுமா டோலுமா பாடல் வெளியாகவே கூடாது என்று நான் நினைத்தேன். படப்பிடிப்பு அன்று காலையில் நடக்கவிருந்த நிலையில், முந்தைய நாள் இரவே இயக்குநரைத் தொடர்புகொண்டு படப்பிடிப்பைத் தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஏனெனில், அந்தப் பாடல் எடுபடாது என்றும், அஜித் குமார் அவர்களின் ரசிகர்களுக்கு அது பிடிக்காது என்றும் நான் கருதினேன். அவரும் சரி என்று சொன்னார், ஆனால் படப்பிடிப்பை நடத்தினார். பின்னர் அவர் அஜித்திடம் தொலைபேசியைக் கொடுத்தார். அவரோ அந்தப் பாடல் தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறினார். அவ்வளவுதான், என் நிலைமை மோசமாகிவிட்டது என்று அனிருத் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் முதல் மகுடம் வரை நாளை பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Suriya: நாளை திரையரங்குகளில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. கியூட் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Follow Us