கதவை தட்டிய சிபிசிஐடி.. அதிர்ந்து போன தூத்துக்குடி இளைஞர்.. சோதனையில் சிக்கிய கிலோ கணக்கிலான தங்கம்!
Thoothukudi CBCID Police Seize 56 Sovereign Gold : தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 56 பவுன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் தங்க மூட்டை கிடந்த விகாரம் தொடர்பாக இளைஞர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட சோதனையில் 56 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் முடுக்கு தருவை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, ராமநாதபுரத்தை சேர்ந்த குப்புசாமி, பரமக்குடியை சேர்ந்த செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருந்தனர். இந்த விசாரணையில், அவர்களிடம் இருந்து 38 தங்க கட்டிகள், 28 பவுன் தங்க நகை, ரூ.12.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
முக்காணி தாமிரபரணி ஆற்றில் தங்க மூட்டை மீட்பு
அத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றில் ஒரு மூட்டை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை செய்ததில், தங்கம் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த தங்கத்தை பகிர்ந்து கொள்வதற்காக ராமநாதபுரம் வந்ததாகவும், முக்காணி பகுதியை சேர்ந்த மூவரும் கூறினர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் ஆத்தூர் ஆற்றங்கரை பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி ( 28 வயது) என்பவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: போலி நூல்கள் உருவாக்க 5 பேர்.. சாட் ஜிபிடி-யில் சந்தாதாரான மோகன்.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 56 பவுன் தங்கம் பறிமுதல்
இந்தச் சோதனையில் அவரது வீட்டில் இருந்து தங்க சங்கிலி, மோதிரம், கம்மல், ஆரம், கை சங்கிலி என சுமார் 56 பவுன் தங்க நகைகளும், ரூ. 67,000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன், முக்காணி தாமிரபரணி ஆற்றில் தங்க மூட்டை கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் ஆற்றங்கரையை சேர்ந்த கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த தங்கம் எங்கிருந்து கிடைத்தது. வீடுகள், நகைக் கடைகளில் ஏதேனும் கொள்ளை அடிக்க பட்டதா.
ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்த சிபிசிஐடி போலீசார்
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளி வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க : கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜினாமா முடிவு? விரைவில் கைதாகிறார்!