AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vishal: சினிமாவில் 22வது வருடம்.. ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட விஷால்!

Vishals 22-Year Journey: நடிகர் விஷால் தற்போது சினிமாவில் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். இவரின் மகுடம் படமானது சமீபத்தில் திரையரங்குகளிபோல் வெளியாகியது. சினிமாவில் இவர் 22வது வருடத்தை கடந்துள்ள நிலையில், அது குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Vishal: சினிமாவில் 22வது வருடம்.. ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட விஷால்!
விஷால்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Aug 2026 20:11 PM IST

கடந்த 2004ம் ஆண்டில் வெளியான செல்லமே (Chellame) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால் (Vishal). இவர் இதற்கு முன் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் (Action King Arjun) வேதம் (Vedham) படத்தில் உதவி இயக்குநராகவும், முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். பின் அர்ஜுனின் உந்துதலால் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். செல்லமே என்ற திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுக திரைப்படமாக இருந்தாலும், இவருக்கு வரவேற்பை கொடுத்த திரைப்படம் சண்டக்கோழி (Sandakozhi). இந்த படத்திற்கு பின், தாமிரபரணி என்ற படத்தில் நடித்து தென் தமிழக மக்களையும் கவர்ந்தார். இந்த படத்திற்கு பின் தொடர்ந்து புது புது படங்களில் விஷால் நடிக்க தொடங்கியிருந்தார். இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்துவந்த நிலையில், தற்போது இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகியுள்ள படம்தான் மகுடம் (Magudam). இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்நிலையில் தற்போது விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவிடன் அந்த மாதிரியான ஒரு கதையை சொன்னேன் – இயக்குநர் எச்.வினோத்

சினிமாவில் 22வது ஆண்டை கடந்தது பற்றி விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அந்த பதிவில் விஷால், “திரைத்துறையில் 22 ஆண்டுகள், அதே ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் கலை மீதான பேரார்வத்துடன் இந்தப் பயணம் தொடர்கிறது” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில், மகுடம் படத்திற்காக தனது உடலை தயார் செய்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் 22வது வருடத்தில் விஷால்:

நடிகர் விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மகுடம். இந்த படத்தில் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுடன் அஞ்சலி, துஷாரா விஜயன் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் 51வது வருட சினிமா.. கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழு!

வேதம் என்ற படத்தின் உதவி இயக்குநர் மற்றும் துணை நடிகராக சினிமாவில் நுழைந்து, தற்போது லீட் நடிகராகவும் இயக்குநராகவும் விஷால் உருவெடுத்துள்ளார். மேலும் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிவருகிறார். தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படம் 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us