AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AA23: லோகேஷ் கனகராஜின் டிசி பட வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய AA23 படக்குழு!

DC Movie Success: தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்த படம்தான் டிசி. இந்த படத்தின் வெற்றியை, லோகேஷின் AA23 படக்குழு கேக் வெட்டி கொண்டடையுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

AA23: லோகேஷ் கனகராஜின் டிசி பட வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய AA23 படக்குழு!
டிசி பட வெற்றியைக் கொண்டாடிய AA23 படக்குழுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Aug 2026 14:50 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தமிழில் முதல்வர் விஜய் (CM VIjay) முதல் கமல்ஹாசன் (Kamal Haasan) போன்ற பல்வேறு நட்சத்திர நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் இதுவரை மொத்தமாக 6 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் இவர் அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் (Arun Matheswaran) இயக்கத்தில், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பிலும் வெளியான படம்தான் டிசி (DC). இதில் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) மற்றும் வாமிகா கபி (Wamiqa Gabbi) போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

மேலும் லோகேஷ் கனகராஜ் தற்போது, அல்லு அர்ஜுனின் (Allu Arjun) AA23 படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில், AA23 பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், லோகேஷ் கனகராஜின் டிசி பட வெற்றியை கொண்டாடியுள்ளது. இது தொடர்பான பதிவையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: சினிமாவில் ஒரு பாகமாக இருக்க விரும்பியதில்லை – உண்மையை உடைத்த சூர்யா!

லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடிய அல்லு அர்ஜுனின் AA23 படக்குழு:

லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் AA23 படம்:

தற்போது நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் ராக்கா என்ற படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். இப்படம் ஆரம்பத்தில் AA22 என அறிவிக்கப்பட்ட நிலையில், பின் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் AA23 படத்திலும் இணைந்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு பதிவு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதையும் படிங்க: ஒவ்வொரு மூச்சிலும் சுதந்திரம்… ஒவ்வொரு இதயத்திலும் பெருமிதம்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட தர்மன் படக்குழு

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் இணைந்து பணியாற்றவுள்ளார்கள். மேலும் இதை மைத்ரி மோதி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் நெகடிவ் வேடத்தில் நடிப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், ராக்கா பட ஷூட்டிங்கை முடித்த கையேடு அல்லு அர்ஜுன் AA23 இணைவார் என கூறப்படுகிறது.

Follow Us