AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: சினிமாவில் ஒரு பாகமாக இருக்க விரும்பியதில்லை – உண்மையை உடைத்த சூர்யா!

Why Suriya Joined Cinema: தென்னிந்திய ரசிகர்கள் கொண்டாடிவரும் நாயகனாக இருப்பவர் சூர்யா. இவரை ரசிகர்கள் தி ஒன் என்றும் அழைக்கிறார்கள். முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சூர்யா, ஆரம்பத்தில் தான் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை மற்றும் நடிக்க வந்ததற்கான காரணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

Suriya: சினிமாவில் ஒரு பாகமாக இருக்க விரும்பியதில்லை – உண்மையை உடைத்த சூர்யா!
சூர்யாImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 15 Aug 2026 08:31 AM IST

நடிகர் சூர்யா (Suriya) தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பிலும் சினிமாவில் இதுவரை மொத்தமாக 46 படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் முதல்வர் விஜய்யுடனும் (CM Vijay) இரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவருக்கு முதல் படமாக அமைந்தது இயக்குநர் வசந்த் (Vasanth) இயக்கத்திலும், இயக்குநர் மணி ரத்தினத்தின் தயாரிப்பிலும் வெளியான நேருக்கு நேர் (Nerukku Ner) படம்தான். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் சினிமாவில் கதாநாயகனாக சூர்யா நடிக்க தொடங்கியிருந்தார். இயக்குநர் பாலா முதல் மணி ரத்தினம் வரை பல்வேறு நடிகர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவ்வாறாக இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலே அதிகம் வசூல் செய்த முதல் படம் கருப்பு (Karuppu).

ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் 2026ம் ஆண்டு மே மாதத்தில் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில், முன்பு பேட்டி ஒன்றில் பேசியிருந்த சூர்யா, தனது வாழ்க்கையில் சினிமாவின் பக்கம் வர கூடாது என எண்ணியது மற்றும் சினிமாவிற்கு வந்த காரணம் பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீட்டில் அமைதி.. ஒரு கணவராக என்ன பின்பற்றவேண்டும்.. சூர்யா சொன்ன ரூல்ஸ்!

சூர்யாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by prime video IN (@primevideoin)

சினிமாவிற்கு முன் தனது வேலை மற்றும் சினியாவில் நுழைந்ததற்கான காரணம் பற்றி சூர்யா:

அந்த நேர்காணலில் சூர்யா, “எப்போதும் நீங்கள் தவிர்த்துவந்த பாதைக்கு, விதி உங்களை அழைத்து செல்லும்”. எனது தலைமுறையில் வீட்டில் நான் மூத்தவன். அதனால் வெளியே சென்று எதாவது வேலை செய்யவேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. நான் எப்போதும் திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருப்பதற்கு விரும்பியதில்லை. நான் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஆடை தொழிலில் இருந்தேன். ஒரு சமயத்தில் எங்களுக்கு பணத்தேவை அதிகமாக இருந்தது. எனது அம்மா வீட்டில் உள்ள சில நிதி நிலையை பற்றி என்னிடம் பேசினார். அதனால் நான் சினிமாவில் நுழைந்தேன். எனது விதியும் முற்றிலும் மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் சாரை முதன்முதலில் சந்தித்த போது… நடிகை ஸ்ரேயா சரணின் சுவாரஸ்ய பேச்சு

பண தேவை அதிகமாக இருந்ததால், அதுவரை பார்த்த வேலையிலிருந்து விளக்கினேன். வெறும் 5 நாட்களிலே நான் கேமராவின் முன் நிற்க ஆரம்பித்தேன். அதை ஒருபோதும் நான் நினைத்ததில்லை, திட்டமிடவில்லை. நேருக்கு நேர் படத்திலிருந்து அந்த நடிகர் விலகியதால் மட்டுமே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு நன்றி சொல்ல விரும்பிகிறேன். என்னை நீ ஒரு நடிகன் என நம்பவைத்து வசந்த் சார் மற்றும் மணிரத்தினம் சார் தான்” என அதில் அவர் கூறியிருந்தார்.

Follow Us