AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் சினிமாவில் நடிகையாக நடிக்கவேண்டும் என்ற முடிவை எடுத்து அப்போதுதான் – மமிதா பைஜூ!

Mamitha Baiju About Hers Early Career: தென்னிந்திய திரைத்துறையில் இளம் நாயகியாக அனைவரையும் கவர்ந்துவருபவர் மமிதா பைஜூ. இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நாயகியாக நடித்துவருகிறார். முன்பு ஒரு நேர்காணலில் பேசிய அவர், நடிகையாக நடிக்கவேண்டும் என்ற முடிவை எப்போது எடுத்தார் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

நான் சினிமாவில் நடிகையாக நடிக்கவேண்டும் என்ற முடிவை எடுத்து அப்போதுதான் – மமிதா பைஜூ!
மமிதா பைஜூImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Aug 2026 08:31 AM IST

தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் இளம் நடிகையாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவருபவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்திவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தம் 3 படங்கள் வெளியாகியுள்ளது. அதிலும் இறுதியாக முதல்வர் விஜய்யின், ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் அவரின் வளர்ப்பு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் அதிரடி ஆக்ஷன் காட்சியிலும் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மலையாளம் சினிமாவின் மூலமாக இவர் நாயகியாக அறிமுகமான நிலையில், ஆரம்பகால படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, எப்போது தனக்கு சினிமாவில் முழுமையாக நடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? இயக்குநர் ராஜமௌலி விளக்கம்

சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது எப்போது என்பது பற்றி மமிதா பைஜூ:

முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, அதில் “நான் ஒரு 10 படங்களுக்கும் மேல் நடித்தபிறகுதான், சினிமாதான் எனது வாழ்க்கை, சினிமாவில்தான் இனிமேல் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. சினிமாவில்தான் இனி எல்லாமே என்று அந்த 10 படங்களுக்கு பிறகுதான் நான் முடிவு பண்ணேன். நான் ஆரம்பத்தில் நடித்த அந்த படங்களில், நான் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்திருந்தேன்.

இதையும் படிங்க: இந்த சிறுவன் யாருனு தெரியுதா? ரசிகர்கள் கொண்டாடும் ராக்ஸ்டார் இவர்.. அட இவர்தான்!

நான் எனது முதல் படத்தில், எப்போதாவது வருவதுபோலவே காட்சிகள் இருக்கும். நான் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட, அதில் மாநில அளவில் பரிசு கிடைத்திருந்த நிலையில், பேப்பரில் வந்திருந்தேன். அந்த நேரத்திலும் எனது அப்பாவின் நண்பர் ஒருவர் படத்தின் தயாரிப்பாளராக இருந்தார், அப்போதுதான் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது” என அதில் அவர் கூறியிருந்தார்.

மமிதா பைஜூவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Mamitha Baiju (@mamitha_baiju)

நடிகை மமிதா பைஜூ தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்கிறார். மேலும் இவர் தெலுங்கில் எல்லம்மா என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக மமிதா நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழில் இவர் பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பில் புது படத்தில் நாயகியக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us