BKU: நிவின் பாலி – மமிதா பைஜூவின் ‘பெத்லஹேம் குடும்பா யூனிட்’ படத்தின் கதை இதுவா?
Bethlehem Kudumba Unit: மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நிவின் பாலி. இயக்குனர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நிவின் மற்றும் மமிதா இணைந்து நடித்த படம்தான் பெத்லஹேம் குடும்பா யூனிட். இப்படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர்தான் நிவின் பாலி (Nivin Pauly). இவர் மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் தொடர்ந்து புது படங்களில் நடித்துவருகிறார். இவர் பிரேமலு (Premalu) பட இயக்குநர் கிரிஷ் ஏடி (Girish AD) இயக்கத்தில் நடித்துவந்த புது படம்தான் பெத்லஹேம் குடும்பா யூனிட் (Bethlehem Kudumba Unit). இதில் நிவின் பாலி சிறப்பான வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், கடந்த 2026ம் மே இறுதியில் முழுமையாக நிறைவடைந்தது. இந்த படமானது பீல் குட் காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது அதிக ஆர்வம் எழுதுவருகிறது.
இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. அந்த வகையில் இப்படத்திலிருந்து அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: இன்று கோலாகலமாக நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி
பெத்லஹேம் குடும்பா யூனிட் பட கதைக்களம் இதுவா?:
இப்படத்தின் கதையானது, வெளிநாட்டிலிருந்து ஆஷ்லி (மமிதா பைஜூ) வீடு திரும்பும்போது, பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு திருமணம், அவளது முதல் காதலான ஜஸ்டினின் (நிவின் பாலி) நினைவுகளைக் கிளறுவதால், அந்தப் பயணம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பத்தை அடைகிறது. இத்திரைப்படம் முதல் காதல், இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் காத்திருக்கத் தகுந்த காதல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு மனதை நெகிழ வைக்கும் காதல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: அஜித்தின் படங்களை ஏன் தயாரிக்கவில்லை? – விளக்கம் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!
பெத்லஹேம் குடும்பா யூனிட் படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் நிவின் பாலி பகிர்ந்த எக்ஸ் பதிவு:
Your Onam Plan is here 🎬#BKU releasing 21 August , 2026
See you in theatres ❤️@_mamithabaiju @BhavanaStudios #NivinPauly #MamithaBaiju #BKU #BethlehemKudumbaUnit #Onam2026 #August21 pic.twitter.com/Wp4xKM52Lr
— Nivin Pauly (@NivinOfficial) August 7, 2026
2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படமானது வெளியாகிறது. இப்படம் வெளியாகும் அதே தேதியில்தான் நடிகர் துல்கர் சல்மானின் ஐஅம் கேம் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனின் கலீஃபா போன்ற திரைப்படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையில் மொத்தம் மூன்று பெரிய படங்கள் ஒன்றாக மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



