AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனது 50-வது படத்திற்காக மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி

Actor Nivin Pauly 50th Movie Vijayam Update | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் 50-வது படமாக உருவாக உள்ள விஜயம் படம் குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தனது 50-வது படத்திற்காக மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி
விஜயம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jun 2026 15:43 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் நிவின் பாலி. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார். மேலும் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக தமிழ் மொழியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள மொழியில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் நிவின் பாலி கடந்த 21017-ம் ஆண்டு முதல் தமிழ்  மொழியிலும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி 2017-ம் ஆண்டு ரிச்சி என்ற படத்தில் நிவின் பாலி நடித்தார். அதனைத் தொடர்ந்து ஏழு கடல் ஏழு மலை மற்றும் பென்ஸ் ஆகிய தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகராக வலம் வரும் நிவின் பாலி அவ்வபோது படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் தற்போது அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் பெத்லகேம் குடும்ப யூனிட் என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது நிவின் பாலி நடிப்பில் உருவாக உள்ள அவரது 50-வது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.

மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி:

அதன்படி நடிகர் நிவின் பாலியின் 50-வது படத்திற்கு விஜயம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் எழுதி, இயக்குவது மட்டும் இன்றி எடிட்டிங் பணியையும் மேற்கொள்கிறார். மேலும் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வீடியோவைப் பார்க்கும் போது நடிகர் நிவின் பாலி ஒரு பைக் ரேஸராக நடித்து இருப்பது தெரிகிறது. இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… Heartin: எதிர்பாராத டுவிஸ்ட்.. முக்கோண காதல் கதையில் ஒரு அழகான படம்.. மடோனா செபாஸ்டியனின் ஹார்டின் படம் எப்படி இருக்கு?

நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Arjun Das: லோகேஷ் அப்படி பண்ணுவாருனு நா சாத்தியமா எதிர்பாக்கல – அர்ஜுன் தாஸ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Follow Us