AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கான் சிட்டி டூ ஹார்ட்டின்… இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ

This Week Theatre Release Movies List | தமிழ் முதல் மலையாள சினிமா வரை ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியல் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

கான் சிட்டி டூ ஹார்ட்டின்… இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2026 17:44 PM IST

கான் சிட்டி படம்: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் கான் சிட்டி. இந்தப் படத்தை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ளார். டார்க் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக நடிகை அன்னா பென் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுட இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் நாளை 26-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கீகாரம் படம்: இயக்குநர் ஜே.பி. தென் பதியன் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் தற்போது வெளியாக உள்ள படம் அங்கீகாரம். இந்தப் படத்தில் கே.ஜே.ராஜேஷ் நாயகனாக நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை தயாரிப்பாளராக வலம் வந்த இவர் இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். இந்தப் படம் நாளை 26-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பாலன் படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் முழுமையாக மீளவில்லை – நடிகர் சூர்யா

உயிரி படம்: உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மலையாள சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் உயிர். இந்தப் படத்தை இயக்குநர் பத்மகுமார் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரோஷன் மேத்யூ நாயகனாக நடித்து உள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் நாளை 26-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாரிட்டின் படம்: ரொமாண்டிக் காமெடி பாணியில் இயக்குநர் கிஷோர் குமார் எழுதி இயக்கி உள்ள படம் ஹார்டின். நடிகர் சனந்த் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில வருடன் இணைந்து நடிகர்கள் மடோனா செபாஸ்டியன், எமயா டி, வாட்ஸ்அப் மணி, டெப்னிதா கர் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் நாளை 26-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… கருப்பு படத்தில் கேமியோ செய்ததற்கு ஆர்யாவிற்கு நன்றி கூறிய ஆர்.ஜே.பாலாஜி

Follow Us