AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஷாலுக்காக அவன் இவன் படத்தில் இயக்குநர் பாலா எடுத்த முக்கிய முடிவு – நடிகர் ஆர்யா ஓபன் டாக்

Actor Arya talks about Avan Ivan movie shooting experience | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவன் இவன் படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

விஷாலுக்காக அவன் இவன் படத்தில் இயக்குநர் பாலா எடுத்த முக்கிய முடிவு – நடிகர் ஆர்யா ஓபன் டாக்
பாலா, ஆர்யா மற்றும் விஷால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jun 2026 16:53 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. சினிமாவில் படங்களுக்காக உடல் எடையை கூட்டுவது குறைப்பது மற்றும் தோற்றங்களை மிகவும் மெனக்கெட்டு மாற்றும் நடிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அந்த பட்டியலில் நிச்சயமாக நடிகர் ஆர்யா இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் மிஸ்டர் எக்ஸ் என்ற படம் வெளியானது. ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது ஓடிடியிலும் வெளியாகி கவனத்தை பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அனந்தன் காடு. மலையாள சினிமாவில் உருவான இந்தப் படம் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அப்படி படத்தின் புரமோஷனில் இருக்கும் போது நடிகர் ஆர்யா அவன் இவன் படத்தின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை கூறியுள்ளர்.

விஷாலுக்காக அவன் இவன் படத்தில் பாலா எடுத்த முக்கிய முடிவு:

அவன் இவன் படப்பிடிப்பு தொடங்கி 45 நாட்கள் கடந்த நிலையில், திரையில் விஷாலின் தோற்றம் போதுமான அளவு தனித்துவமாக இல்லை என்று கருதிய இயக்குனர் பாலா, அதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை முழுவதுமாக நிராகரித்தார். அதன்பின், படப்பிடிப்பைத் தொடர்வதற்கு முன்னதாக, விஷாலின் பற்கள் மற்றும் கண்கள் உள்ளிட்ட அம்சங்களில் மாற்றங்களைச் செய்து அவரது தோற்றம் புதிதாக வடிவமைக்கப்பட்டது. இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், படப்பிடிப்பின் 100-வது நாளில்தான் கதையை முழுமையாக இறுதி செய்ததாக பாலாவின் உதவி இயக்குநர்களில் ஒருவர் எங்களிடம் கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Trisha: எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு.. முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த நடிகை திரிஷா!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Vikram Prabhu: ரத்த கதையின் தொடக்கம்… அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் புது படத்தில் இணைந்த விக்ரம் பிரபு!

Follow Us