AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தின் VFX சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசிய ஆர்.ஜே. பாலாஜி

Director RJ Balaji about Karuppu movie VFX issue | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற கருப்பு படத்தில் சில VFX காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்தின் VFX சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசிய ஆர்.ஜே. பாலாஜி
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jun 2026 13:46 PM IST

தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக அளவில் வசூலித்த படம் கருப்பு. இந்தப் படம் கடந்த 2026-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் இந்திரன்ஸ், திர்ஷா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, ஷிவதா, நட்டி சுப்ரமணியம், அனகா மாயா, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியம், வேலா ராம மூர்த்தி, தீபா ஷங்கர், லொல்லு சபா மாறன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு பிறகு VFX காட்சிகள் சர்ச்சையில் சிக்கிய நிலையில் அது குறித்து ஆ.ஜே.பாலாஜி வெளிப்படையாக பேசியுள்ளார்.

கருப்பு பட VFX சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசிய ஆர்.ஜே. பாலாஜி:

ஒரு காட்சியில் நடிகரின் தலையை மாற்றும் (head replacement) பணியை முழுமையாக முடிக்க சுமார் எட்டு மாதங்கள் ஆகும். இப்பணிகளை வெகு காலத்திற்கு முன்பே தொடங்க வேண்டியிருப்பதால், அதற்கான கட்டணங்களையும் எட்டு மாதங்களுக்கு முன்பே செலுத்த வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, எங்களால் அந்தக் கட்டணச் செலுத்துதல் காலக்கெடுவைக் கடைப்பிடிக்க முடியவில்லை. அதே வேளையில், அக்காட்சியைப் படத்திலிருந்து நீக்குவதும் சாத்தியமான ஒன்றாக இருக்கவில்லை. OTT தளத்தில் வெளியான பிறகு, படத்தின் சில பகுதிகள் மட்டுமே விமர்சனத்திற்கு உள்ளாகின. மற்ற காட்சிகள் அனைத்தும் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் பணிகளை இன்னும் சிறப்பாகத் திட்டமிடுவோம். சொல்லப்போனால், பார்வையாளர்கள் பகிர்ந்துகொண்டதை விட அதிகமான ‘ஸ்கிரீன்ஷாட்களை’ (screenshots) அந்தப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் வகையில் நான் சேகரித்து வைத்துள்ளேன். எனவே, அவை குறித்து எங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Shoba Chandrasekhar: விமர்சனங்களுக்கு விஜய் பதிலளிக்க விரும்புவதில்லை… ஆனால் அவர் – முதல்வரின் தாய் ஷோபா பகிர்ந்த விஷயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் டிவியில் புது சீரியலில் இணைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா.. அட இந்த சீரியல்தான்!

Follow Us