AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்களது மகளின் முகத்தை வெளிப்படுத்திய ராம் சரண் – உபாசனா தம்பதி… உற்சாகத்தில் ரசிகர்கள்

Ram Charan daughter Klinkaras face reveal | தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய சினிமா குடும்பமாக உள்ளது ராம் சரணின் குடும்பம். இவர்களின் குடும்பத்தில் உள்ள பலரும் சினிமாவில் வெவ்வேறு துறைகளில் உள்ளனர். இந்த நிலையில் ராம் சரணின் மகள் புகைப்படத்தை இன்று வெளியிட்டு உள்ளனர்.

தங்களது மகளின் முகத்தை வெளிப்படுத்திய ராம் சரண் – உபாசனா தம்பதி… உற்சாகத்தில் ரசிகர்கள்
மகள் க்ளின் காரா உடன் ராம் சரண் - உபாசனா தம்பதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jun 2026 18:05 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் தான் நடிகர் ராம் சரண். இவர்களின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான நபர்கள் சினிமா தொடர்பான தொழிலையே செய்து வருகின்றனர். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முக்கிய குடும்பமாக இருக்கும் இவர்களின் குடும்பத்தினர் புகைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியின் குழந்தைகளின் புகைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில் ராம் சரணின் குழந்தைகளின் முகம் தெரியாத பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வந்தது.

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ராம் சரண் தற்போது சினிமாவில் ஒரு மிகப்பெரிய வெற்றீயைப் பெற்று மகிழ்ச்சியில் இருக்கிறார். அது மட்டும் இன்றி பெட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஒரு சர்ப்ரைஸை வெளியிட்டுள்ளனர். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தங்களது மகளின் முகத்தை வெளிப்படுத்திய ராம் சரண் – உபாசனா தம்பதி:

தெலுங்கு சினிமாவில் பிரபல தம்பதியாக உள்ள ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு முதலாவதா ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக இரட்டை குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று ராம் சரணின் முதல் மகளுக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. அதனை முன்னிட்டு அந்த குழந்தையின் புகைப்படத்தை உபாசனா வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… யூசுப் கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் தனுஷ்

உபாசனா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து வெளியானது பட்டாம்பூச்சி பாடல்

Follow Us