AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Shoba Chandrasekhar: விமர்சனங்களுக்கு விஜய் பதிலளிக்க விரும்புவதில்லை… ஆனால் அவர் – முதல்வரின் தாய் ஷோபா பகிர்ந்த விஷயம்!

Shoba Chandrasekhar About CM Vijay Personality: தமிழ் சினிமாவில் படகியாகவும், முதல்வர் விஜய்யின் தாயாராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷோபா சந்திரசேகர். இவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் முதல்வர் விஜய் குறித்து பல விஷயங்களை தெரிவித்திருந்தார். மேலும் அவர் விமர்சனங்களுக்கு பதிலளிக்க விரும்பாத காரணம் பற்றியும் தெரிவித்துள்ளார்.

Shoba Chandrasekhar: விமர்சனங்களுக்கு விஜய் பதிலளிக்க விரும்புவதில்லை… ஆனால் அவர் – முதல்வரின் தாய் ஷோபா பகிர்ந்த விஷயம்!
ஷோபா, முதல்வர் விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Jun 2026 16:48 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தயாராகவும், படகியாகவும் பிரபலமானவர் ஷோபா சந்திரசேகர் (Shoba Chandrasekhar). இவர் தமிழ் திரைப்படங்களில் பாடகியாக பல படங்களை பாடியுள்ளார். குறிப்பாக தளபதி விஜய்யுடன் “தொட்டப்பட்ட ரோட்டுமேலே” என்ற பாடலையும் பாடி அசத்தியிருக்கிறார். இவரின் கணவரும், தளபதி விஜய்யின் தந்தையுமாக இருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர் (SA Chandrasekhar). இவரின் இயக்கத்தில் 1992ம் ஆண்டில் தளபதி விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தளபதி விஜய் சினிமாவில் எந்த அளவிற்கு பிரபலமோ, அதுபோலவே இயக்குநராக எஸ்.ஏ.சந்திரசேகரும் பிரபலம்தான். கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் தளபதி விஜய் முதல்வராக பதிவியியற்றிருந்த நிலையில், அந்த விழாவில் பெற்றோர்களாக ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இருவருமே கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் கண்ணீர் மல்க தனது மகனின் பதிவேற்ப்பு விழாவை கண்டுகளித்தனர். அந்த வகையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில், முதல்வர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் பேட்டியளித்திருந்தார். அதில் முதல்வர் விஜய்க்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் குறித்து பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் டூ நயன்தாரா வரை.. முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!

முதல்வர் விஜய் குறித்து தாய் ஷோபா சந்திர சேகர் பகிர்ந்த ரகசியங்கள்:

அந்த பேட்டியில் பேசிய ஷோபா, “தளபதி விஜய்க்கு அறிவுரை கேட்க விரும்பமாட்டார். ஒருவேளை அவர் அறிவுரை வழங்குவதையே விரும்புவார் போலும். திரையுலகில் ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவு இல்லை. நிறைய விமர்சனங்கள் இருந்தன, ஆனால் விஜய் அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டார். அரசியலில், பெற்றோர்களாகிய எங்களை பல விஷயங்கள் பயமுறுத்தியது. அது அதிக ஆதரவு இல்லாத ஒரு கடினமான களம் என்று நாங்கள் நினைத்தோம். அவர் தனித்து நின்றார், அவர் அரசியலுக்குள் வந்திருக்கவே கூடாது என்று கூட நான் உணர்ந்தேன். கரூர் கூட்ட நெரிசலின் போது, ​​அவர் மிகவும் சோகமாக இருந்தார். ஆனால் அவர் இயல்புநிலைக்கு திரும்ப கொஞ்ச நாட்கள் எடுத்து.

இதையும் படிங்க : நடிகர் டூ முதல்வர்.. தொடரும் சாதனைகள்.. முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்!

விஜய் ஒவ்வொரு கேள்விக்கும், விமர்சனத்திற்கும் பதிலளிக்க விரும்புவதில்லை. அதற்கு மாறாக அவர் தனது செயல்கள் மூலம் பதிலளிக்கவே விரும்புவார். அவருக்கு வாக்குவாதங்களோ அல்லது வதந்திகளோ பிடிக்காது. ஒரு தாயாக, சிங்கப்பெண் முன்னெடுப்பைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இரு பெற்றோரும் உயிருடன் இருக்கும்போதே முதலமைச்சரான முதல் நபர் விஜய்தான். அவர் முதலமைச்சராக காமராஜரைப் போல ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என அதில் அவர் பேசியிருந்தார்.

முதல்வர் விஜய் குறித்து அவரின் தாய் ஷோபா பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:

முதல்வர் விஜய் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 22ம் தேதியில், தனது 52வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டதை வருகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களின் வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us