AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vijay Birthday: ராகவா லாரன்ஸ் டூ நயன்தாரா வரை.. முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!

Thalapathy Vijay 52nd Birthday: ஒருகாலத்தில் கோலிவுட் சினிமாவே எதிர்பார்க்கும் நாளாக இருந்ததுதான் ஜூன் 22ம் தேதி. அன்று தளபதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரின் புது படங்களில் அப்டேட் வெளியாகும்.ஆனால் இந்த ஆண்டில் இல்லை. தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Vijay Birthday: ராகவா லாரன்ஸ் டூ நயன்தாரா வரை.. முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jun 2026 10:32 AM IST

கோலிவுட் சினிமாவில் உச்சமாக இருந்தவர் முன்னாள் நடிகர் தளபதி விஜய் (CM Thalapathy Vijay). இவர் தற்போது அரசியலில் முழுவதுமாக இறங்கிய நிலையில், 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, தமிழக முதல்வராக (Chief Minister of Tamil Nadu) பதிவியேற்றுள்ளார். இன்று 2026ம் ஆண்டு ஜூன் 22ம் தேதியில், அவர் தனது 52வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். முதல்வராக பதிவியேற்றபின் தனது முதல் பிறந்தநாளை அவர் கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தங்களின் வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். ஜூன் 22ம் தேதி என்றாலே ஒரு காலத்தில் தளபதி விஜய்யின் புது படத்தின் அப்டேட், பாடல்கள் மற்றும் முதல் பார்வை போன்ற அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

அந்த வகையில், அவருக்கு எந்த புது படங்களின் அப்டேட் இல்லாத பிறந்தநாளாக 52வது பிறந்தநாளை அமைந்துள்ளது. இந்நிலையில் அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தென்னிந்திய சினிமா பிரபாலங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: நடிகர் டூ முதல்வர்.. தொடரும் சாதனைகள்.. முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்!

முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்:

எல்லா வருடமும், எனது நண்பர் விஜய்க்கு நான் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிப்பேன். ஆனால் இந்த வருடம் மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால் அவர் தற்போது தமிழக முதல்வராக இருக்கிறார் என தனது இனிமையான வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சிபி சத்யராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

முதல்வருக்கு வாழ்த்தைத் தெரிவித்து, இந்த வருடம் உங்களின் புது படத்தின் முதல் பாடல், முதல் பார்வை போன்ற விஷயங்களை மிஸ் செய்வதாக சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த நயன்தாரா:

முதல்வர் விஜய்க்கு பிறந்தநாளை வாழ்த்து சொன்ன சாந்தனு:

நடிகர் சாந்தனு, முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து. அவருடனான நல்ல அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு குழந்தையின் முதல் ஹீரோ.. தந்தையர் தினத்தை முன்னிட்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கவின் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அந்த பதிவில் பிறந்தநாளை வாழ்த்து கூறிய கவின், உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கவும், மேலும் பல ஆண்டுகள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அர்ஜுன்தாஸ் :

அந்த பதிவில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, உங்களுக்கு மிகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டு சிறப்பாக அமையட்டும்! கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us