AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அம்மாவாக போகிறாரா நடிகை சமந்தா? வைரலாகும் போட்டோ

Did Samantha is about to become a mother | தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் நடைப்பெற்ற நிலையில் அவர் கர்ப்பமாக உள்ளாரா என்று புகைப்படத்தைப் பார்த்து சில செய்திகள் வெளியாகி வருகின்றது.

அம்மாவாக போகிறாரா நடிகை சமந்தா? வைரலாகும் போட்டோ
கணவர் உடன் நடிகை சமந்தாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jun 2026 21:13 PM IST

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். இந்தப் படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இந்தப் படத்தை இயக்கி உள்ள நிலையில் படத்தின் திரைக்கதையை ராஜ் நிடிமோரு, வசந்த் மரிங்காண்டி மற்றும் பிரஹாஸ் பொப்புடி ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை ட்ரலலா மூவிங் பிக்சர்ஸ் சார்பாக சமந்தா, ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.

ஆக்‌ஷன் ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் உருவான இந்தப் படம் நேற்று 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலை படத்தின் வெற்றி விழாவிற்கு சென்ற நடிகை சமந்தாவின் புகைப்படத்தைப் பார்த்து அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அம்மாவாக போகிறாரா நடிகை சமந்தா?

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கணவர் நாக சைத்தன்யா உடன் விவாகரத்தைப் பெற்றார் நடிகை சமந்தா ரூத் பிரபு. அதனைத் தொடர்ந்து 4 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வந்த அவர் இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கும் சமந்தா இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்த நிலையில் நடிகை சமந்தா மா இண்டி பங்காரம் படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அவருக்கு குட்டியாக வயிரு வந்து இருப்பதைப் பார்த்தவர்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா? தாயாகப் போகிறாரா என்று செய்திகள் பரவி வருகின்றது. இது தற்போது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பி உள்ளது.

Also Read… Magudam: விஷாலின் மகுடம் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரைஸ் ஆப் லிங்கா’ வெளியானது!

இணையத்தில் வைரலாகும் சமந்தா போட்டோஸ்:

Also Read… காதல் காதல் காதல் சீரியலில் இணைந்த பாரதி கண்ணம்மா புகழ் அருண் – வைரலாகும் புரோமோ இதோ!

Follow Us