AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதல் காதல் காதல் சீரியலில் இணைந்த பாரதி கண்ணம்மா புகழ் அருண் – வைரலாகும் புரோமோ இதோ!

Bharathi Kannamma Serial fame Arun Kumar New Serial: விஜய் தொலைக்காட்சியில் மூன்று காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் சீரியல்தான் காதல் காதல் காதல். தற்போது இந்த சீரியலில் பாரதி கண்ணமா புகழ் அருண் இணைத்துள்ளார். தற்போது இது தொடர்பான புரோமோ வைரலாகிவருகிறது.

காதல் காதல் காதல் சீரியலில் இணைந்த பாரதி கண்ணம்மா புகழ் அருண் –  வைரலாகும் புரோமோ இதோ!
காதல் காதல் காதல் தொடர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jun 2026 20:27 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் பாரதி கண்ணம்மா (Bharathi Kannamma) என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் அருண் குமார் (Arun Kumar). இவர் இந்த சீரியலில் பாரதி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து இவர் சில படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார். சொல்லப்போனால் இயக்குநர் ரத்னகுமார் (Rathnakumar) மற்றும் வைபவ் கூட்டணியில் வெளியான மேயாத மான் படத்தில் (Meyadha Maan), வைபவின் நண்பனாக இவர் நடித்திருந்தார். இதையடுத்து சீரியல் பக்கம் நுழைந்த நிலையில், மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இந்த வரிசைடியில் பிக் பாஸ் சீசன் 8 (Bigg Boss Season 8) நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்திருந்தார். இதில் இறுதி வாரத்தில் வெளியேறினார். இதையடுத்து எந்த படங்கள் மற்றும் சீரியலில் நடிக்கவில்லை என்ற நிலையில், தற்போது புது சீரியலில் இணைந்துள்ளார்.

விஜய் டிவியில் மூன்று காதலை மையமாக கொண்ட காதல் காதல் காதல் (Kadhal Kadhal Kadhal Serial) என சீரியலில் 3வது ஹீரோவாக இவர் நடித்துவருகிறார். தற்போது இது குறித்த புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து வெளியானது பட்டாம்பூச்சி பாடல்

காதல் காதல் காதல் சீரியலின் 3வது ஹீரோ குறித்து வெளியாகியிருந்த புரோமோ எக்ஸ் பதிவு:

இந்த காதல் காதல் காதல் சீரியலில் நடிகர் அருண் குமார், தமிழ் வாத்தியாராக நடித்துள்ளார். பெண்கள் மீட்டது அதிக மரியாதையை மற்றும் எந்த சமூக ஊடகங்களிலும் இல்லாத ஒரு ஹீரோவாக இதில் அவர் நடித்துவருகிறாராம். தற்போது இந்த் சீரியல் குறித்த புரோமோ வெளியாகியுள்ள நிலையில், இணையத்தில் பரவிவருகிறது.

இதையும் படிங்க : யூசுப் கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் தனுஷ்

காதல் காதல் காதல் சீரியல் ரிலீஸ் எப்போது:

காதல் காதல் காதல் சீரியலில் முதல் இரு ஹீரோக்களும் அறிமுக சீரியல் நடிகர்கள்தான். இந்த சீரியலில் பரிட்சயமான ஹீரோ என்ற அது அருண் மட்டுமே. இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில், ஜீ தமிழில் வெளியாகிவந்த அண்ணா சீரியல் புகழ் நடிகை சுசித்ரா நடித்துவருகிறாராம். இந்த சீரியல் மூன்று காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இந்த சீரியலானது 2026ம் ஆண்டு ஜூலை ஆரம்பத்தில் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Follow Us