AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Heartin: முக்கோண காதல் கதையில்… மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ஹார்ட்டின் பட ட்ரெய்லர் வெளியானது!

Heartin Movie Trailer: தென்னிந்திய மொழிகளில் இளம் நடிகையாக தொடர்ந்து சினிமாவில் நடித்துவருபவர் மடோனா செபாஸ்டியன். இவரின் நடிப்பில் சிறப்பான காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள புதிய படம்தான் ஹார்ட்டின். இப்படமானது சிறப்பாக காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Heartin: முக்கோண காதல் கதையில்… மடோனா செபாஸ்டியன்  நடித்துள்ள ஹார்ட்டின் பட ட்ரெய்லர் வெளியானது!
ஹார்டின் திரைப்பட டிரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jun 2026 17:27 PM IST

மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன் (Madonna Sebastian) . இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. தனது முதல் படத்திலே நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், இதன் வரவேற்பை தொடர்ந்து பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரையில் பல்வேறு உச்ச நடிகர்களுடன் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் “ஜாலி ஓ ஜிம்கானா” (Jolly O Gymkhana) என்ற படமானது வெளியானது. கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் ஒன்றரை ஆண்டுக்கும் மேல் எந்த படமும் தமிழில் வெளியாகவில்லை. இந்நிலையில் நீண்ட நாளுக்கு இந்த தமிழில் உருவாகியுள்ள புதிய படம்தான் ஹார்ட்டின் (Heartin).

இதில் சனந்த் ரெட்டி (Sananth Reddy) ஹீரோவாக நடிக்க அவருடன் மடோனா செபாஸ்டியன், முன்னாள் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா (Emaya) இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இதை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் (Kishore Kumar)  இயக்க, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரொமாண்டிக் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: என்ன பெத்த மகளே மகராசி.. கட்டா குஸ்தி 2 படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

சனந்த் ரெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியனின் ஹார்ட்டின் பட ட்ரெய்லர் குறித்த பதிவு:

ஹார்ட்டின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில், மடோனா மற்றும் சனந்த் இருவருமே காதலித்துவருகின்றனர். இவர்கள் காதலில் சிறு பிரிவின்போது, இமயா அதில் நுழைகிறார். சனந்த் மற்றும் மடோனா காதலை பிரித்து, இமயா, சனந்த்தை காதலிக்க நினைக்கிறார். ஒரு முக்கோண காதல் கதைக்களத்தில் இப்படமானது உருவாகியிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: யூசுப் கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் தனுஷ்

ஹார்ட்டின் படத்தின் சென்சார் அப்டேட்:

இந்த ஹார்ட்டின் படமானது சாதாரணமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதற்க்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் என்பவர் இசையமைத்துள்ள நிலையில், சிறப்பாக பாடல்களும், பின்னணி இசையும் உருவாகியுள்ளது. இப்படத்தில் பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ள நிலையில், படத்தின் மீது எதிர்ப்பார்ப்பும் அதிகம். இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ 16+ சான்றிதழை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us