என்ன பெத்த மகளே மகராசி.. கட்டா குஸ்தி 2 படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!
Magaraasi Song: இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கத்தில் பார்ட் 2 படமாக தயாராகியுள்ள புதிய படம்தான் கட்டா குஸ்தி 2. இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள நிலையில், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்திலிருந்து மகராசி என்ற 2வது பாடல் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) நடிப்பில் தமிழில் தயாராகியுள்ள புத்தம் புதிய திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) நாயகியாக நடித்துள்ளார். இப்படம் 2022ம் ஆண்டில் வெளியாகியிருந்த கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தையும் இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள இப்படமானது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தில் நடிகர்கள் யோகி பாபு (Yogi Babu), ரம்யா கிருஷ்ணன், கருணாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இதற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில், சம்பவகாரி என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது. மகராசி என்ற இப்படலானது அப்பா மற்றும் மகளின் பாசம் குறித்த வரிகளுடன் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: 2 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி.. சமந்தாவின் எங்கள் தங்கம் படம் வெற்றியானதா? இல்லையா?- விமர்சனங்கள் இதோ!
கட்டா குஸ்தி 2 படத்தின் மகராசி பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The perfect song for the Father’s Day weekend ❤️#Magaraasi from #GattaKusthi2 — out now.
A @RSeanRoldan musical, in theatres from July 3rd.
Sung by @vijaynarain.
Lyrics by @MuthamilRms.
Choreography – Baba Baskar.Produced by @VelsFilmIntl &… pic.twitter.com/D2k1QtSHxd
— Vels Film International (@VelsFilmIntl) June 19, 2026
கட்டா குஸ்தி 2 படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்:
இந்த படமானது முழுக்க முழுக்க பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். முதல் பாகமானது குஸ்தியை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்த நிலையில், 2வது பாகம் கணவன் மனைவிக்கு நடுவே நடக்கும் பிரச்சனையால் வெடிக்கும் சண்டையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகர்கள் சிவா – ஜெய் வைத்து படம் இயக்க திட்டமிடும் வெங்கட் பிரபு? வைரலாகும் தகவல்
இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதன் காரணமாக இதன் ட்ரெய்லர் வரும் 2026ம் ஜூன் இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கட்டா குஸ்தி 2 படத்தின் சென்சார் சான்றிதழ்:
இந்த கட்டா குஸ்தி 2 படமானது பேமிலி ஆக்ஷன் மற்றும் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு யு/ஏ 13+ சென்சார் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 13 வயதிற்கு மேற்பட்டோர் இப்படத்தை திரையரங்குகளில் சென்று காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுபற்றி அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.