AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர்கள் சிவா – ஜெய் வைத்து படம் இயக்க திட்டமிடும் வெங்கட் பிரபு? வைரலாகும் தகவல்

Director Venkat Prabhu next Immediate movie update here | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் உடனடியாக சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர்கள் சிவா – ஜெய் வைத்து படம் இயக்க திட்டமிடும் வெங்கட் பிரபு? வைரலாகும் தகவல்
வெங்கட் பிரபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jun 2026 15:17 PM IST

தமிழ் சினிமாவில் இசைக் குடும்பமாக வலம் வரும் இளையராஜாவின் குடும்பத்தில் பலர் சினிமாவில் உள்ளனர். அதில் இளையராஜா சினிமாவில் அறிமுகம் ஆன பிறகு அடுத்ததாக அவரது தம்பி கங்கை அமரனும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் இசையமைப்பது மட்டும் இன்றி படங்களை இயக்குவது பாடல் பாடுபவது, பாடல்களை எழுதும் பணிகளையும் செய்துள்ளார். தற்போது நடித்தும் வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் மகன்கள் மற்றும் மகள் இசைத் துறையையே சினிமாவில் தேர்ந்து எடுத்து இருந்தாலும் கங்கை அமரனின் இரண்டு மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் இருவரும் சினிமாவில் வேறு துறைகளை தேர்வு செய்தனர். அதில் பிரேம் ஜி நடிகராக இருக்கிறார் என்றால் வெங்கட் பிரபு ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகராக இருந்த நிலையில் தற்போது இயக்குநராக தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

அதன்படி வெங்கட் பிரபு நடிகராக நடித்து படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதைவிட அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இறுதியாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் எந்தப் படத்தை இயக்குவார் என்று தொடர்ந்து ரசிகர்களிடையே கேள்வி எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் சிவா – ஜெய் வைத்து படம் இயக்க திட்டமிடும் வெங்கட் பிரபு:

இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது ஒரு திரைப்படத்தை விரைவாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் ஜெய், சிவா மற்றும் வெங்கட் பிரபுவின் குழுவினர் இடம்பெறுவார்கள். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்தின் பணிகள் சற்று தாமதமாவதாகத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இது தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

Also Read… அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி – 16 ஆண்டுகளைக் கடந்தது ராவணன் படம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நூறு சாமி முதல் சின்ன சின்ன ஆசை வரை… தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

Follow Us