AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Nooru Saami: ஸ்வாசிகா முதல் அஜய் திஷன் வரை.. நூறு சாமி பட கேரக்டர் அறிமுக போஸ்டர்கள் இதோ!

Nooru Saami Character Introduction Posters: இயக்குநர் சசியின் இயக்கத்தில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில், தயாராகியுள்ள புதிய படம்தான் நூறு சாமி. இதில் விஜய் ஆண்டனி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தனது உழைப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் குறித்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Nooru Saami: ஸ்வாசிகா முதல் அஜய் திஷன் வரை.. நூறு சாமி பட கேரக்டர் அறிமுக போஸ்டர்கள் இதோ!
நூறு சாமி பட கேரக்டர் அறிமுக போஸ்டர்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jun 2026 17:45 PM IST

நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நடிப்பில் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக தயாராகியுள்ள புதிய திரைப்படம்தான் நூறு சாமி (Nooru Saami). இப்படத்தில் இயக்குநர் சசி (Director Sasi) தனது வித்தியாசமான கதைக்களத்தை புகுத்தியுள்ளார். இதில் விஜய் ஆண்டனி நடிகராக நடித்திருந்தாலும், நடிகை ஸ்வாசிகாவின் (Swasika) கதாபாத்திரமே இப்படத்தின் பெரிய தூணாக இருப்பதாக தெரிகிறது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் அஜய் திஷன் (Ajay Dishan), கருணாஸ், முனீஸ்காந்த், லிஜோமோல் ஜோஸ், காவ்யா அனில், அருள்தாஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது அம்மாவின் பாசம், மனுஷியாக பார்க்கப்படும் அம்மாவின் கதையை மையமாக கொண்டு சசி இயக்கியுள்ளார்.

இப்படமானது சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக போஸ்டர்கள் இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அது ஒரு சோதனை முயற்சி.. கருப்பு படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கம் குறித்து ஆர்யா பேச்சு!

ஸ்வாசிகாவின் கதாபாத்திரம் அறிமுகம் குறித்து நூறு சாமி படக்குழு வெளியிட்ட பதிவு:

நடிகர் ஸ்வாசிகாதான் இப்படத்தில் மெயின் கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில், இதில் அவர் “செல்வி” என்ற கதாபாத்திரத்தில், இரு குழ்நதைகளின் அம்மாவாக நடித்துள்ளார்.

அஜய் திஷனின் கேரக்டர் அறிமுக போஸ்டர் குறித்து நூறு சாமி படக்குழு வெளியிட்ட பதிவு:

மார்கன், பூக்கி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் அஜய் திஷன். இப்படத்தில் அவர் ஸ்வாசிகாவின் மூத்த மகனாக “பாஸ்கர்” என்ற வேடத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு.

இதையும் படிங்க: முன்பு எல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் போல என்று நினைத்தேன் – சமந்தா ரூத் பிரபு

நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாபாத்திரம் குறித்து படக்குழு வெளியிட்ட போஸ்டர்:

தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லிஜோமோல் ஜோஸ். இவர் இருபடத்தில் சிஸ்டர் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், அவரின் கதாபாத்திரத்திற்கு “ஏஞ்சலா சிஸ்டர்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Follow Us