Mysskin: விஜய் ஆண்டனி – ஸ்வாசிகா வைத்து ஒரு படம்.. வாய்ப்பு கொடுங்க – மிஷ்கின் பேச்சு!
Mysskins New Project with Vijay Antony: கோலிவுட் சினிமாவில் தனது வித்தியாசமான திரைக்கதைகளின் மூலமாக பிரபலமானவர் மிஷ்கின். இவர் சமீபத்தில், விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் விழாவில் கலந்துகொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகாவை வைத்து புது படம் ஒன்று எடுக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கினின் (Mysskin) இயக்கத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் இயக்கத்தில் இதுவரையில் குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், அனைத்து படங்களும் கருத்து மிக்கதாக இருக்கும். இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த படம் சைக்கோ. கடந்த 2020ம் ஆண்டில் வெளியான இப்படத்திற்கு பிறகு, இவரின் இயக்கத்தில் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. மேலும் இப்படத்திற்கு பின் ஆண்ட்ரியாவின் (Andrea) பிசாசு 2 (Pisasu 2) மற்றும் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) ட்ரெயின் (Train) போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இதில் ஆண்ட்ரியாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 படமானது சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இயக்குநராக பிரபலமான இவர், தற்போது படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து அசத்திவருகிறார்.
இறுதியாக பரிமளா அண்ட் கோ (Parimala And Co) படத்தில் போலீஸ் ஆதிகாரியாக நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் இவர் மலையாளத்திலும் படங்களில் நடித்துவருகிறார். அண்மையில் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நூறு சாமி (Nooru saami) படத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட இவர், தனது புது படத்திற்காக விஜய் ஆன்டனியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.




இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ
விஜய் ஆண்டனியை வைத்து புது படத்தை இயக்க ஆசைப்படுவது குறித்து மிஷ்கின் சொன்ன விஷயம்:
அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்னிடம் நல்ல கதை ஒன்னு இருக்கிறது. சின்ன கதைதான். அதில் நீங்களும் (விஜய் ஆன்டனி) ஸ்வாசிகாவும் நடிங்க. அந்த படம் வேகமாக போவது, ஜனரஞ்சக படமும் கிடையாது, சின்ன படம்தான். உடனே எனக்கு 6 வருடமாக படம் வெளியாகவில்லை என இவர் இப்படி சொல்லுறாரு-னு நினைக்கவேண்டாம். நான் நூறு சாமி படத்தை பார்த்துவிட்டு, உத்வேமாகிவிட்டேன். இவர்கள் இருவரையும் மீண்டும் இப்படத்தின் மூலம் வாழவைக்கவேண்டும் என நினைக்கிறேன்.
இதையும் படிங்க: நான் படத்திற்காக உழைக்கவில்லையா? திருப்பூர் சுப்புரமணியமுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி!
அதனால் உங்கள் இருவரையும் ஒரு படத்தில் நடிக்கவைக்கவேண்டும் என நினைக்கிறன். ஒரு குழந்தைத்தனமான ஆசை எனக்கு. சின்ன பட்ஜெட்தான் நான் பெரிய சம்பளம் எல்லாம் கேட்கமாட்டேன். உண்மையிலே நல்ல படமாக அது இருக்கும்” என அதில் இயக்குநர் மிஷ்கின் வெளிப்படையாக பேசியிருந்தார்.
நூறு சாமி திரைப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு:
😊❤️
Thank you, sir, for launching the trailer and for your valuable support to this movie. Thank you so much. https://t.co/0KB9XHMz5M— vijayantony (@vijayantony) June 8, 2026
இந்த நூறு சாமி படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார். இப்படமானத் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது.