Master Mahendran: கரண்ட் போகுதா..? சோலார் வாங்கி மாட்டிக்கோங்க! – மாஸ்டர் மகேந்திரன் பேச்சு!
Master Mahendran on TN Electricity Crisis: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து தற்போது ஹீரோவாகவும் படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்திவருபவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், தமிழகத்தில் கரண்ட் பிரச்சனை இருப்பது குறித்தும், முதல்வர் விஜய்யின் அரசியல் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக காணலாம்.
கோலிவுட் சினிமாவில் கடந்த 1994ம் ஆண்டில் நாட்டாமை என்ற படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவராலும் கவரப்பட்டவர் மாஸ்டர் மகேந்திரன் (Master Mahendran). இவர் தமிழில் தொடர்ந்து ரஜினிகாந்த் (Rajinikanth), சரத்குமார் போன்ற பிரபலங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து மிகவும் பிரபலமானார். இதையடுத்து இவர் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான முதல் காதல் மலை என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். 2010ம் ஆண்டிலே கதாநாயகனாக படங்களில் அறிமுகமான இவர், தொடர்ந்து ஹீரோவாக நடிக்க தொடங்கியிருந்தார்.இவர் ஹீரோவாக நடித்த படங்கள் அவர் எதிர்பார்த்தது போல வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து மீண்டும் பெரிய ஹீரோக்களின் படங்களில் முக்கியமான வேடத்தில் நடிக்க தொடங்கினார்.
சமீபத்தில் இயக்குநர் ரத்னகுமார் (Rathna Kumar) இயக்கிய 29 படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மாஸ்டர் மகேந்திரன், தமிழகத்தில் மக்கள் சந்தித்துவரும் மின்சார பிரச்சனை மற்றும் முதல்வர் விஜய்யின் (CM Vijay) அரசியல் குறித்து வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: அனிருத்துக்கு பிடிச்ச நடிகை யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
தமிழகத்தில் மக்கள் சந்தித்துவரும் கரண்ட் பிரச்சனை குறித்து பேசிய மாஸ்டர் மகேந்திரன்:
அந்த நேர்காணலில் பேசிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், “கரண்ட் போகுதா? சோலார் சிஸ்டம்-னு ஒன்னு கண்டுபிடிச்சாங்க, அதை யாரவது ட்ரை பண்ணிங்களா?. இவ்வளவு நாள் கரண்ட் இருந்துச்சி நல்ல இருந்துச்சா!, இப்போ கரண்ட் இல்லியா? ஒரு ஆறு மாதம் எதுவும் கேட்காதீங்க. என் வீட்டிலிருந்து கூட கரண்ட் எடுத்துக்கோங்க. எனக்கு தெரியும் சோலாரை வைத்து எப்படி ஃபேன் ஓட வைக்கணும்-னு தெரியும். அவரை (விஜய்) கேள்வி கேட்டல் மட்டும் உங்களுக்கு கரண்ட் வந்துவிடவா போகுது?.
இதையும் படிங்க: மகாநதி சீரியலில் லாஸ்ட் டே ஷூட்டிங்.. எமோஷனலாக கண்ணீர்விட்ட நடிகர்கள் – வீடியோ இதோ!
அப்போது ஏன் கேள்விகளை கேக்குறீங்க. சும்மா ஒருத்தரையே எவ்வளவு வருசமா கேள்வி கேப்பீங்க?. உங்களுக்கு பதில் வேணுமா? வேண்டாமா?. நீங்கள் கேள்வி கேட்பதை நிறுத்தினால்தான் பதிலே கிடைக்கும்” என அதில் அவர் வெளிப்படையாக தனது கருத்தை முன்வைத்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
நடிகர் மகேந்திரனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
தமிழகத்தில் ஏற்படும் மின்சார பிரச்சனைகள் குறித்து பேசிய மாஸ்டர் மகேந்திரனின் கருத்திற்கு, பலரும் ஆதரவு தெரிவித்தாலும், சில தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர். தற்போது இவரின் கருது இணையத்தில் தீயாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.