AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ

Music composer Santhosh Narayanan Joins DV 4 Movie | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் தற்போது துருவ் விக்ரம் படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ
துருவ் விக்ரம் - சந்தோஷ் நாராயணன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Aug 2026 17:09 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவரது மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் துருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவில் இதுவரை 3 படங்களில் நடித்துள்ளார். அதில் முதல் தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக் படமான ஆதித்ய வர்மா ஆகும். இரண்டாவது நடிகர் விக்ரம் நாயகனாக நடித்த மகான் படத்தில் துருவ் விக்ரம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் மூன்றாவதாக வெளியான படம் பைசன் காளமாடன். இந்தப் படம் கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உண்மை கதையை கொண்டு உருவானது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் கடந்த 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்:

இந்தப் படத்தினை இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுதி இயக்க உள்ள நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பார் என்று செய்திகள் இணையத்தில் வைரலாகி வந்தது. ஆனால் தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைப்பதாக தெரிவித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படம் புது அடையாளத்தை கொடுத்துள்ளது – நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

துருவ் விக்ரம் 4 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 25 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி அஜித் குமார்!

Follow Us