AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

25 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி அஜித் குமார்!

Shalini Ajith Kumar enters the cinema after 25 years | தென்னிந்திய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி அஜித் குமார். இவர் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து உள்ளார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி அஜித் குமார்!
ஷாலினிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Aug 2026 19:11 PM IST

தென்னிந்திய மொழிகளில் பல நடிகர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரகு நாயகன் மற்றும் நாயகியாக நடித்து உள்ளனர். இதில் குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே தங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொள்வார்கள். அந்த வரிசையில் முக்கியமானவர்தான் நடிகை ஷாலினி. இவர் நாயகியாக நடித்தப் படங்களின் எண்ணிக்கையைவிட குழந்தை நட்சத்திரமாக நடித்தப் படங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரை தற்போது வரை பல ரசிகர்கள் பேபி ஷாலினி என்று அழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குழந்தை நட்சத்திரம் மற்றும் நாயகி என பலப் படங்களில் நடித்த ஷாலினி நடிகர் அஜித் குமாரை காதல் திருமணம் செய்த பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

அதன்படி கடந்த 2001-ம் ஆண்டு தான் நடிகை ஷாலினியின் படம் திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த நடிகை ஷாலினி தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் நடிகையாக அல்லாமல் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி:

அதன்படி நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தின் கூட்டணி தொடர்பான அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. இதன் காரணமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அஜித் குமாரின் 64 படத்திற்கு டேர் டெவில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தினை நடிகை ஷாலினி அஜித் குமார் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ப்ரேச்ஹார்ட்ஸ் புரடெக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… கட்டா குஸ்தி 2 படத்தில் குஸ்தி மட்டும் இல்லை… மத்தபடி ஓகே – ஓடிடி விமர்சனம் இதோ

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Mamitha Baiju: ஒருவாட்டி சான்ஸ் மிஸ் ஆகிட்டு.. சூர்யாவுடன் நடித்தது குறித்து பகிர்ந்த மமிதா பைஜூ!

Follow Us