AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரியோ ராஜின் ராம் இன் லீலா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Ram In Leela Movie OTT Update | தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள ராம் இன் லீலா படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது.

ரியோ ராஜின் ராம் இன் லீலா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
ராம் இன் லீலாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Aug 2026 20:06 PM IST

தமிழ் சின்னத்திரையில் 90ஸ் கிட்ஸ்களிடையே மிகவும் பிரபலமான சீரியலாக இருந்தது கனாக் காணும் காலங்கள். பள்ளி மற்றும் கல்லூரி கால வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியல் வெளியானதால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த ரியோ அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போதே ரசிகர்களின் பட்டாளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நாயனகான நடித்த நடிகர் ரியோ ராஜ் பிறகு வெள்ளித்திரையில் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் இவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் நடிகர் ரியோ ராஜ் சமீப காலமாக ஹிட் படங்களை அதிக அளவில் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அடுத்தடுத்து ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண் பாவம் பொல்லாதது என படங்கள் வரிசையாக வெற்றிப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ஆண் பாவம் பொல்லாதது.

ராம் இன் லீலா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்:

இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இந்த ராம் இன் லீலா படத்தினை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை வர்த்திகா ஜெயின் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Sasikumar: அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வி மட்டும் மாறவே இல்லை – சசிகுமார்!

ராம் இன் லீலா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன்.. காதலனை அறிமுகம் செய்த மிருணாளினி ரவி!

Follow Us