AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jason Sanjay: உண்மையிலே ஒரு வரலாற்று தருணம்.. பொறுப்புகளும் அதிகமாக இருக்கு – முதல்வர் விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

Jason Sanjay About His Father CM Vijay: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி மக்களை கவர்ந்தவருபவர் ஜேசன் சஞ்சய். இவர் தமிழக முதல்வர் விஜய்யின் மூத்த மகனும் கூட. இவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில், தனது தந்தை விஜய் முதல்வரான நிலையில், தங்களுக்கு இருக்கும் பொறுப்புகள் குறித்து தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக காணலாம்.

Jason Sanjay: உண்மையிலே ஒரு வரலாற்று தருணம்.. பொறுப்புகளும் அதிகமாக இருக்கு – முதல்வர் விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!
தனது தந்தை முதல்வர் விஜய் பற்றி ஜேசன் சஞ்சய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Aug 2026 14:56 PM IST

தமிழ் சினிமாவில் சிறுவயது முதலே ஆர்வமிக்க கொண்டிருந்தவர் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் (CM Vijay) . இவர் தனது தந்தை விஜய் சினிமாவில் இருக்கும்போதே படங்களில் பணியாற்றும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் விஜய் நடித்திருந்த “வேட்டைக்காரன்” திரைப்படத்தில் ஒரு பாடலில் தனது தந்தையுடன் இணைந்து நடனமாடி மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு இதற்கு பின் இவர் சினிமாவில் பெரிதாக எந்த படங்களிலும் பணியாற்றவில்லை. தற்போது இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ், ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள புது திரைப்படம்தான் சிக்மா (Sigma). இந்த படத்தில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) ஹீரோவாக நடிக்க, ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படம் என்ற நிலையில், இதன் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் தொடர்பாக ஜேசன் சஞ்சய் நேர்காணலில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய் முதல்வரான தருணம் மற்றும் அதனால் வந்த பொறுப்புகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? அப்டேட் இதோ

தனது தந்தை முதல்வரான தருணம் மற்றும் பொறுப்புகள் குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்:

அந்த நேர்காணலில் ஜேசன் சஞ்சய், “என் அப்பா முதலமைச்சராக இருப்பதைப் பார்ப்பது உண்மையிலேயே ஒரு வரலாற்றுத் தருணம். இது எனக்கும் என் குடும்பத்திற்கும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு. அவர் எனக்குக் கூறிய அறிவுரை எளிமையானது. உனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கு, உனக்கென ஒரு பெயரை நிலைநாட்டு. மேலும், உனக்கு எப்போதாவது உதவி தேவைப்பட்டால், அவர் எப்போதும் இருப்பார் என்றும் கூறினார்” என்று அதில் அவர் ஓபனாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: கமல் ஹாசனின் புதுப் படத்தின் பணிகள் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

தனது தந்தை முதல்வர் விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் வெளிப்படையாக பேசியது தொடர்பான பதிவு:

இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் ஜன நாயகன் வெளியாகிய காரணத்தால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us