எங்க அப்பா தான்…. முதல்வர் விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது அப்பா முதல்வர் விஜய் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் பிரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்பு தாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைக்கா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
அப்பா குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்
இந்த நிலையில் சிக்மா படம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜேசன் சஞ்சய் பேட்டியளித்திருந்தார். அப்போது தொகுப்பாளர் டிடி, உங்களுக்கு ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில் இருந்து எந்த நடிகரை தேர்வு செய்வீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த சஞ்சய், என் நினைவுக்கு முதலில் வருவது அப்பா தான். இருவரும் சேர்ந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.
இதையும் படிக்க : இன்னும் அந்தச் சம்பவத்திலிருந்து மீளவில்லை – ஜன நாயகன் பட எடிட்டர் எமோஷனல் பேச்சு!




முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு ஜேசன் சஞ்சய் பொது வெளியில் தனது பெற்றோர் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். சிக்மா பட தயாரிப்பாளர்களில் ஒருவரான தமிழ்குமரன் முதல்வர் விஜய்யை சந்தித்த போது கூட ஜேசன் சந்திக்கவில்லை இந்த நிலையில் தற்போது சிக்மா பட நிகழ்வுகளில் தனது தந்தையை பற்றி பேசி வருவது மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
ஜேசன் சஞ்சய் முதன்முதலில் வேட்டைக்காரன் படத்தில் முதல் பாடலில் தனது தந்தையுடன் இணைந்து நடனமாடியிருப்பார். இதனையடுத்து அவர் ஹீரோவாக அறிமுகமாவார் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. காரணம் முதல்வர் விஜய்யும் தனது சிறு வயதில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களில் நடித்து வந்தார்.
இதையும் படிக்க : தர்மன் படத்தில் சிம்ரன் மேம் இணைந்தது இப்படிதான்- இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!
பின்னர் அவர் ஹீரோவாகி இன்று தமிழ் நாட்டின் முதல்வராகியிருக்கிறார். அந்த வழியில் ஜேசன் சஞ்சய்யும் ஹீரோவாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது தாத்தா வழியில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
சிக்மா படத்துக்கு பிறகு அவர் இயக்குநராக தொடர்வாரா அல்லது நடிகராக அறிமுகமாவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. சிக்மா ஜூலை 31, 2026 இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியானதால் ‘சிக்மா’ ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில் ஆகஸ்ட், 2026 படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் புது வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.