Madhampatty Rangaraj: ராகா ரங்கராஜின் முழு பொறுப்பையும் ஏற்கிறேன்.. மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பதிவு!
Chef Madhampatty Rangarajs Instagram Post: சின்னத்திரை தொலைக்காட்சி ரியாலிட்டியான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் ஆடைவடிவமைப்பாளர் ஜாய் கிரீசில்டாவை திருமணம் செய்து, பின் பல விவகாரங்களில் ஈடுபட்டிருந்தார். தற்போது அவர் தனக்கும் மற்றும் ஜாய் கிரீசில்டாவுக்கும் பிறந்த ராகா ரங்கராஜை தனது மகனாக மற்றும் அவரின் முழு பொறுப்பையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மெஹந்தி சர்க்கஸ் (Mehandi Circus) என்ற திரைப்படத்தின் முகம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் பிரபல செஃப் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் செஃப்-ஆக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி ரங்கராஜ் (Shruti Rangaraj) என்ற மனைவி இருக்கும் நிலையில், அவரை விவாகரத்து செய்வதற்கு முண்ணனி, ஆடைவடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணம் செய்த சில மாதங்களே தான் கர்ப்பமாக இருப்பதையும் ஜாய் கிரிசில்டா அறிவித்திருந்தார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி ன்பின் விவாகரத்தானவர் என்பது ண்குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவை விருப்பத்துடன் திருமணம் செய்யவில்லை, அந்த குழந்தை எனது குழந்தை என்பதை டிஎன்ஏ பரிசோதனை செய்து உறுதியானால் மட்டுமே நம்புவேன் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றிருந்தகத்து.
இந்நிலையில், டிஎன்ஏ பரிசோதனையில் அது மாதம்பட்டி ரங்கராஜன் குழந்தைதான் என உறுதியான நிலையில், தற்போது முதல் முறையாக தனது குழந்தை ராகா ரங்கராஜை (Raha Rangaraj) தனது கைகளில் தூக்கி வைத்திருப்போதுபோன்றும், அந்த குழந்தையின் வாழ்நாள் முழு செலவு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.




இதையும் படிங்க: பிரீத்தி முகுந்தன் பர்த்டே.. இதயம் முரளி பட BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!
செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இந்த பதிவில் தனது மகன் ராகா ரங்கராஜை தூக்கிவைத்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் பின் அதில் தனது மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். அந்த பதிவில், எனது மகன் ராகா ரங்கராஜிற்கு ஒரு தந்தையாக செய்யவேண்டிய அணைத்து விஷயங்களை கடந்த 6 மாதமாக செய்துவருகிறேன். இனி, என் வாழ்நாள் முழுவதும், அவரின் எதிர்காலம் குறித்த முழு பொறுப்பையும் ஏற்று துணையாக நிற்பேன் என அவர் அறிவித்துள்ளார். தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானார் நடிகர் கவின் – குவியும் வாழ்த்து
மாதம்பட்டி ரங்கராஜன் குழந்தைகள்:
நடிகரும், செஃப்- ஆனா மாதம்பட்டி ரங்கராஜ் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவருக்கு கடந்த 2010ம் ஆண்டிலே திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் 2 மகன்கள் இருக்கும் நிலையில், இதையடுத்து ஆடைவடிவமைப்பாளார் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களிலே பிரிந்த நிலையில், அவர்களுக்கு ராகா ரங்கராஜ் என ஒரு மகனும் இருக்கிறார். எனவே செஃப் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மொத்தம் 3 குழந்தைகள் இருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.