AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படத்தை எடுப்பதைவிட வெளியிடவே சிரமமாக இருந்தது – கே.வி.என். வெங்கட் நாராயணன்

KVN Venkat Narayanan talks about Jana Nayagan movie making | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்தை எடுப்பதைவிட வெளியிடவே சிரமமாக இருந்தது – கே.வி.என். வெங்கட் நாராயணன்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2026 11:26 AM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்கள் மிகவும் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருந்த படம் ஜன நாயகன். இந்தப் படத்திற்கு உரிய நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படத்தின் வெளியீடு தொடர்ந்து ஒத்திவைத்துக்கொண்டே இருந்தனர். இதன் காரணமாக இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ஜன நாயகன் படத்திற்காக ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு மிகப் பெரிய காரணம் நடிகர் தளபதி விஜயின் இறுதிப் படம் இது என்பதே ஆகும். தளபதி விஜய் தீவிர அரசியளில் களமிறங்கி தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக வலம் வருகிறார். இந்த நிலையில் தளபதி விஜய் இறுதியாக நடித்த ஜன நாயகன் படம் கடந்த 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்தை எடுப்பதைவிட வெளியிடவே சிரமமாக இருந்தது:

ஜன நாயகன் படத்தை உருவாக்குவது மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் அதைத் திரைக்குக் கொண்டுவருவது பெரும் போராட்டமாக அமைந்தது. இன்றுவரை அறியப்படாத காரணங்களால் நாங்கள் பல சிரமங்களைச் சந்திக்க நேர்ந்தது. மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள், அதாவது கடந்த 15 நாட்களில், உலகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களை ஒருங்கிணைப்பதே எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது.

உலகம் முழுவதும் பல படங்கள் வெளியாகவிருந்த நிலையில், தளபதி விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் இப்படம் திரையரங்குகளை அடைவதற்கும், ரசிகர்கள் அதைத் திரையரங்குகளில் கண்டு ரசித்து கொண்டாடுவதற்கும் ஏற்ற ஒரு தேதியைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ஏற்பாடுகளையும் சரியாகச் செய்ய வேண்டியிருந்தது என்று வெங்கட் நாராயணன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யா 47 படத்தில் ரிலீஸ் தேதி உறுதியானதா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் தமிழ் நாட்டு ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Follow Us