சூர்யா 47 படத்தில் ரிலீஸ் தேதி உறுதியானதா? வைரலாகும் தகவல்
Suriyas 47 movie release update viral on social media | நடிகர் சூர்யாவின் நடிப்பில் 47-வதாக உருவான படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவரது இயக்கத்தில் முன்னதாக மலையாள சினிமாவில் வெளியான படம் ஆவேஷம். டார்க் காமெடி ஆக்ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடியே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் ஃபகத் பாசில் நடித்து இருந்த நிலையில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தினை இயக்கிய இயக்குநர் ஜித்து மாதவன் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் எந்தப் படத்தை இயக்குவார் என்று அசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் சூர்யா உடன் கூட்டணி வைத்ததாக அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா நசீம், நஸ்லேன், ஆனந்த்ராஜ் மற்றும் ஜான் விஜய் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




சூர்யா 47 படத்தில் ரிலீஸ் தேதி உறுதியானதா?
இந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது அதன்படி சூர்யா 47 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போதே தெரியவரும். மேலும் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… லோகேஷ் – அல்லு அர்ஜுனின் படத்தில் நாயகிக்கு முக்கியதுவம் இல்லையா? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Suriya47 – The latest buzz is that the film is aiming for a Diwali release..💥👀 If that happens, it’ll be back to back releases for #Suriya within a very short gap..⭐#Marshal seems to be out of the Diwali race.. #OM is sticking with its October 16 release.. #Seyon has moved… pic.twitter.com/h1z3A8P2G7
— Laxmi Kanth (@iammoviebuff007) July 29, 2026
Also Read… Dulquer Salmaan: மிட்டாய் மழை.. துல்கர் சல்மானின் ‘ஆகாஷம்லோ ஒக தாரா’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!