AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரை கிராமம் பற்றி தவறான கருத்து? ஜனநாயகன் படத்துக்கு எதிராக புதிய வழக்கு – இயக்குநருக்கு நோட்டீஸ்

மதுரை பாப்பாபட்டி கிராமம் பற்றிய தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கும் வரை படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் என சின்னச்சாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிராமம் பற்றி தவறான கருத்து? ஜனநாயகன் படத்துக்கு எதிராக புதிய வழக்கு  – இயக்குநருக்கு நோட்டீஸ்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Jul 2026 14:30 PM IST

மதுரை, ஜூலை 28 : மதுரை பாப்பாபட்டி கிராமம் பற்றிய தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கும் வரை படத்தை திரையிட தடைவிதிக்க வேண்டும் என சின்னச்சாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயகன் படத்தின் மீது மேலும் ஒரு வழக்கு

ஜனநாயகன் படத்திலிருக்கும் சித்தரிக்கப்பட்ட காட்சிகள், பாப்பாபட்டி கிராம மக்களின் நற்பெயரையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் உள்ளன எனக்கூறி சின்னசாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் உள்ள ஆட்சேபனை காட்சிகளை நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தணிக்கை வாரிய தலைவர், தயாரிப்பாளர் பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. படம் வெளியானாலும் படத்தின் மீதான சர்ச்சை தொடர்ந்து வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் தொகுப்பாளர் ஒருவர் எச்.வினோத்திடம், “ஜன நாயகன் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா?” என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “ஆமாம், ஜன நாயகன் படத்தில் மொத்தம் 6 நீக்கப்பட்ட காட்சிகள் உள்ளது. அவற்றில் விஜய் சார் இடம்பெறும் ஒரு வேடிக்கையான காட்சி, 4 சண்டை காட்சி மற்றும் 2 எமோஷனல் காட்சிகள் இருக்கிறது.

அவற்றையெல்லாம் ஒன்றாக வெளியிட தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அந்த நீக்கப்பட்ட காட்சிகளை மொத்தமாக தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைப்போம், அவர்கள் அதை அடுத்தவாரம் (2026 ஆகஸ்ட் முதல் வாரம்) வெளியிடுவார்கள் என நினைக்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

Follow Us