AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிங்கம் பெற்ற பிள்ளை என்று ஊரே சொல்லும் ஓசையோடு… மகன் துல்கர் சல்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்தை வெளியிட்ட மம்முட்டி

Mammootty Birthday Wishes For Dulquer | மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். அவர் இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு மம்முட்டி பிறந்த நாள் வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார்.

சிங்கம் பெற்ற பிள்ளை என்று ஊரே சொல்லும் ஓசையோடு… மகன் துல்கர் சல்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்தை வெளியிட்ட மம்முட்டி
துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jul 2026 12:01 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் பல நூறு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெறுகின்றது. சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் மம்முட்டியின் மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். இவர் மம்முட்டியின் மகனாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் துல்கர் சல்மான் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இவரது கடின உழைப்பே அவரை உச்சத்தில் வைத்து உள்ளது.

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் தற்போது ஸ்ரீ ஸ்ரீ மற்றும் ஐ அம் கேம் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இன்று நடிகர் துல்கர் சல்மான் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது தந்தை மம்முட்டி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகன் துல்கர் சல்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்தை வெளியிட்ட மம்முட்டி:

துல்கர் சல்மான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அர்த்தமுள்ள கதைகள், மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் உங்கள் சிறப்பான பயணத்தில் புதிய மைல்கற்கள் என இந்த ஆண்டும் உங்களுக்கு அமையட்டும். திரைப்படங்கள் மீதான உங்கள் ஆர்வமும், சிறப்பானவற்றைத் தேடும் உங்கள் இடைவிடாத முயற்சியும் எல்லா இடங்களிலும் உள்ள ரசிகர்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன. வரவிருக்கும் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் இன்னும் பெரிய வெற்றிகளைத் தரட்டும்.

Also Read… தளபதி விஜயின் தி கோட் படத்தில் நடிக்க என்ன காரணம்? நடிகை மீனாட்சி சௌத்ரி விளக்கம்

மம்முட்டி கம்பெனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி – சாய் பல்லவி பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

Follow Us