AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ஜோதிகா மேம் சில ஆலோசனைகளை வழங்கினார் – இயக்குநர் வெங்கி அட்லூரி

Director Venky Atluri Interview | தமிழ் சினிமாவில் சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடிஅயே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ஜோதிகா மேம் சில ஆலோசனைகளை வழங்கினார் – இயக்குநர் வெங்கி அட்லூரி
சூரியா - ஜோதிகாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2026 10:54 AM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். ஃபேமிலி ட்ராமா ரொமாண்டிக் பாணியில் உருவாகி உள்ள இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகை மமிதா பைஜூவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மூன்றாவதாக வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென்னிந்திய சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இன்று படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் மாலை வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி அளித்தப் பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ஜோதிகா மேம் சில ஆலோசனைகளை வழங்கினார்:

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் கதையை ஜோதிகா மேடத்திடம் விவரித்தது மிகவும் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும். அந்தக் கதையுடன், குறிப்பாக அதன் முதல் பாதியுடன் அவர் மிகவும் ஒன்றிப்போனார்; அத்துடன் சில மதிப்புமிக்க கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். பலரிடமும் இந்தக் கதையை நான் விவரித்திருந்தாலும், ஜோதிகா மேடம் அளித்த ஆலோசனைகள் மிகவும் ஆழமான மற்றும் சிறப்பான புரிதலைக் கொண்டவையாக இருந்தன. அவர் பரிந்துரைத்த அந்த மாற்றத்தை, படம் வெளியான பிறகு நான் வெளிப்படுத்துவேன்.

Also Read…. H Vinoth: ஜன நாயகன் ரிலீஸோட ஸ்ட்ரெஸ் எல்லாம் முடிஞ்சிது – எச் வினோத் பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read…. ஜன நாயகன் படத்தில் என் காட்சிகளை நீக்கிவிட்டார்கள்… அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட நடிகை ஆனந்தி

Follow Us